புத்த, சமண மற்றும் சீக்கியர்களிடமிருந்து புனித பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் :
திருவள்ளூர் அக் 29 : தமிழ்நாட்டைச் சேர்ந்த 50 புத்தமதத்தினர், 50 சமண மதத்தினர் மற்றும் 20 சீக்கிய மதத்தினர் இந்தியாவில் உள்ள அவரவர் மதங்களுக்கான புனிததலங்களுக்கு புனித பயணம் மேற்கொண்டவர்களுக்காக தமிழக அரசால் ஆண்டுதோறும் நபர் ஒருவருக்கு ரூ.10,000 வீதம் 120 நபர்களுக்கு ரூபாய் 12 இலட்சம் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் புத்த, சமண மற்றும் சீக்கியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்புனித பயணம் புத்தமத தொடர்புடைய 1.பீகாரில் உள்ள புத்தகயா, 2.உத்திரபிரதேசத்தில் உள்ள குசிநகர், 3.வாரணாசியில் உள்ள சாரநாத்கோவில், 4.பீகாரில் உள்ள ராஜ்கிர், வைஷாலி, 5.நேபாளத்தில் உள்ள லும்பினி போன்ற புனித தலங்களையும், சமண மத தொடர்புடைய 1.இராஜஸ்தானில் உள்ள தில்வாரா கோவில், ரணக்பூர் சமணகோவில், ஜெய்சால்மர் சமணகோவில், 2.ஜார்காண்டில் உள்ள சிக்கர்ஜி 3.குஜராத்தில் உள்ள பாலிடனா, 4.பீகாரில் உள்ள பவபுரி சமணகோவில் போன்றஇடங்கள், 5.கர்நாடகாவில் சரவணபெலகோலா போன்ற புனிததலங்களையும் மற்றும் சீக்கியமத தொடர்புடைய 1.பஞ்சாப்பில் உள்ள அமிர்தசரஸ், தக்ட் ஸ்ரீகேசகர சாகிப், தக்ட் ஸ்ரீடாம்டமா சாகிப், 2.பீகாரில் உள்ள தக்ட் ஸ்ரீ ஹர்மந்திர் சாகிப் (குரு கோவிந்த் சிங்), தக்ட் ஸ்ரீ ஹசூர் சாகிப் (மஹாராஷ்டிரா) போன்ற இடங்கள், 3.பாகிஸ்தானிலுள்ள குருத்வாரா ஸ்ரீ நான் காணா சாகிப், குருத்வாரா ஸ்ரீ சச்சா சௌதா, மண்டி சுகர்கானா, குருத்வாரா ஸ்ரீ பஞ்ச சாகிப், ஹசன் அப்தல், குருத்வாரா ஸ்ரீ தெஹ்ரா சாகிப் போன்ற புனித தலங்களையும் உள்ளடக்கியது. இத்திட்டத்தின் கீழ் 01.07.2025க்கு பிறகு புனித பயணம் மேற்கொள்பவர்களுக்கு முறையில் நேரடியாக மானியம் வழங்கப்படும்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 150 பௌத்த நபர்களுக்கு தமிழ்நாடு அரசால் 2025-26 ஆம் ஆண்டில் நாக்பூர் தீக்ஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்மசக்கர பரிவர்தன திருவிழாவிற்கு புனித பயணம் மேற்கொண்டு திரும்பியவர்களுக்கு ECS முறையில் நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.5,000 வரை நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ்பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் பௌத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
இதற்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் / சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி பெறலாம். மேலும் www.bcmbcmw.tn.gov.inஎன்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 30.11.2025க்குள் உரிய ஆவணங்களுடன் அனுப்ப வேண்டிய முகவரி – ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலச மஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை – 600005.எனவே மாவட்டத்தில் வசிக்கும் புத்த, சமண, சீக்கிய மதத்தினர். மற்றும் அனைத்து பௌத்தர்களும் அவரவர் மதங்களுக்கான புனிததலங்களுக்கு புனித பயணம் மேற்டி கொள்பவர்கள் விண்ணப்பங்களைப் பெற்று உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து பயன்பெறுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.