நலம் காக்கும் ஸ்டாலின் ’’திட்டத்தின்நலத்திட்ட உதவி

Loading

தேனி மாவட்டம்

‘’நலம் காக்கும் ஸ்டாலின் ’’ திட்டத்தின்கீழ் கடமலைக்குண்டு
அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற சிறப்பு மருத்துவ முகாமினை
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு,

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தேனி மாவட்டம், கடமலை-மயிலாடும்பாறை வட்டாரம், கடமலைக்குண்டு
அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (25.10.2025) நடைப்பெற்ற “நலம் காக்கும்
ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங்,
இ.ஆ.ப., அவர்கள் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆ.மகாராஜன் அவர்கள்
முன்னிலையில் பார்வையிட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை
வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், உங்கள் குடும்பத்தின் நலன்
அரசின் பொறுப்பு என்ற நோக்கத்தின் அடிப்படையில் நலம் காக்கும் ஸ்டாலின்
பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாமினை 02.08.2025 அன்று தொடங்கி
வைத்தார்கள். அதனடிப்படையில் தேனி மாவட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின்
சிறப்பு மருத்துவ முகாம் வட்டாரத்திற்கு மூன்று வீதம் மொத்தம் 24 மருத்துவ முகாம்
ஒவ்வொரு சனிக்கிழமையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில்
தேனி மாவட்டத்தில் இதுவரை 11 மருத்துவ முகாம்கள்
நடைபெற்றுள்ளது.
இம்முகாமில் இரத்தப்பரிசோதனை மற்றும் இரத்த அழுத்த பரிசோதனை,
பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பு மருத்துவம், மகப்பேறு மற்றும்
பெண்கள் நல மருத்துவம், குழந்கைள் நல மருத்துவம், இருதய மருத்துவம், நரம்பியல்
மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு,
தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், இயன்முறை மருத்துவம்,
கதிரியக்கவியல் மருத்துவம், நுரையீரல் மருத்துவம், சர்க்கரை நோய் மருத்துவம்,
இந்திய மருத்துவம் (ஆயுர்வேதம், சித்தா, யுனானி, யோகா, ஹோமியோபதி) ஆகிய
17 துறைகளை சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் மூலமாக மருத்துவ சேவைகள்
வழங்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் இன்றையதினம், கடமலைக்குண்டு அரசு
மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட
ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து

பெட்டகம், சித்தா பெட்டகம், தொழிலாளர் நல வாரிய அட்டை, முதலமைச்சரின்
விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீல்சேர்,
அடையாள அட்டைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இம்முகாமில் இணை இயக்குநர் (ஊரகம் மற்றும் மருத்துவ நலப்பணிகள்)
மரு.கலைச்செல்வி, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.ஜவஹர்லால், வட்டாட்சியர்
திரு.ஜாஹிர் உசேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தேனி.

0Shares