வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை

Loading

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு :
திருவள்ளூர் அக் 25 : திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட, வேலப்பன்சாவடி நூம்பல் பிரதான சாலையில் நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரூ.1.80கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகளையும்,  நீர்வளத் துறை   சார்பில் வேலப்பன்சாவடி  உயர்மட்ட பாலம் அருகில், மாதிராவேடு தரைபாலம் அருகில், காடுவெட்டி உயர்மட்ட பாலம்  அருகில் ஆகிய பகுதிகளில் கூவம் நீர் வழி பகுதியில் செடி, கொடிகளை அகற்றி தூர்வாரி அழப்படுத்துவது தொடர்பாகவும் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் பார்வையிட்டு ஆய்வு செய்து அனைத்து பணிகளையும் விரைந்து மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் அய்யப்பாக்கம் சுமங்கலி கார்டன்ஸ், அய்யப்பாக்கம் டி.என்.எச்.பி. மற்றும்  திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம் வேப்பம்பட்டு ராமகிருஷ்ணா நகர் ஆகிய பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணிகள் தொடர்பாகவும், மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாக முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.

முன்னதாக. வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் அய்யப்பாக்கம் டி.என்.எச்.பி. பகுதியில்  செயல்பட்டு வரும் நியாய விலை கடையில் மாவட்ட ஆட்சியர்  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்து கேட்டறிந்தார்.இதில் திருவேற்காடு நகர மன்ற தலைவர் என்.இ.கே.மூர்த்தி, நகராட்சி ஆணையர் பே.ராமர், பூவிருந்தவல்லி வட்டாட்சியர் உதயம், நீர்வளத் துறை உதவி செயற்பொறியாளர் மகேந்திரகுமார், ஆவடி வட்டாட்சியர் கண்ணன், உதவி இயக்குநர் ஊராட்சிகள் யுவராஜ், திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0Shares