‘நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு முகாம்
![]()
மக்களின் நல்வாழ்வை பாதுகாக்க “நலம் காக்கும் ஸ்டாலின்” எனும் நல்லதொரு திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் தளபதியார் அவர்கள் தொடங்கி வைத்த நிலையில்,
நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்றத் தொகுதி புனித அந்தோணியார் உயர்நிலைப் பள்ளியில், பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புமருந்துத்துறை சார்பில் இன்று (25.11.2025) நடைபெற்ற ‘நலம் காக்கும்_ஸ்டாலின்” சிறப்பு முகாமில், தமிழ்நாடு அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் அவர்கள், நீலகிரி மாவட்ட கழகப் பொறுப்பாளர் கே.எம்.ராஜு ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அளிக்கப்படும் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிகழ்வில் இணை இயக்குநர் (மருத்துவ நலப்பணிகள்) ராஜசேகரன், துணை இயக்குநர் (சுகாதார பணிகள் பொறுப்பு) சிபி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை RMOரவிசங்கர்,குன்னூர் நகர மன்ற தலைவர் .சுசீலா,
நகர மன்ற துணைத் தலைவர் திரு.வாசிம்ராஜா, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் .ராமசாமி, மாவட்ட அவைத்தலைவர் திரு. போஜன் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

