மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் நேரில் ஆய்வு
![]()
வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், திரு.வி.க. நகர் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி, இன்று (23.10.2025) மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-74, பெரம்பூர், ஏகாங்கிபுரம் லிங்க் ரோடு, ராஜீவ் காந்தி நகரில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு செய்து, அப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் கலந்துரையாடி தேவைகள் குறித்து கேட்டறிந்தார். அப்பகுதியில் உள்ள அனைத்துத் தெருக்களிலும் பார்வையிட்டு குறுகளான சந்துகளில் வசித்து வரும் மக்கள் மழைக்காலங்களில் நடந்து செல்வதற்கு ஏதுவாக குறுகளான சந்து, தெருக்களிலும் உடனடியாக பேவர்பிளாக் சாலை அமைத்திட அலுவலர்களுக்கு உத்திரவிட்டார்.
பின்னர், வார்டு-76, பெரம்பூர், கே.எம். பெரக்ஸ் சாலையில் வசந்தி தியேட்டர் அருகே ஏற்பட்டுள்ள திடீர் பள்ளம் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டு பள்ளம் எவ்வாறு ஏற்பட்டுள்ளது என்பதை அலுவலர்கள் ஆராய்ந்து உடனடியாக பள்ளத்தினை சீரமைத்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, பெரம்பூர், கே.எம். பெரக்ஸ் சாலையில் ஜெனரேட்டர் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் உந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்புப் பணிகள் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தில் தினசரி சேகரிக்கப்படும் கழிவுநீர் குறித்த விவரங்களை அலுவலர்களிடம் கேட்டறிந்து, கழிவுநீர் உந்து நிலையத்தின் செயல்பாட்டினை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுகளின்போது, மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள், திரு. வி.க நகர் சட்டமன்ற உறுப்பினர் திரு. தாயகம்கவி அவர்கள், மத்திய வட்டார துணை ஆணையாளர் திரு.எச்.ஆர்.கௌஷிக், இ.ஆ.ப., அவர்கள், மண்டலக் குழுத் தலைவர் திருமதி.சரிதா மகேஷ் குமார் அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
செய்தி வெளியீடு: இணை இயக்குநர்/மக்கள் தொடர்பு அலுவலர்
பெருநகர சென்னை மாநகராட்சி

