அமைச்சர் சா.மு.நாசர்  துவக்கி வைத்தார்

Loading

திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பருவ கரும்பு அரைவை : அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார் :

திருவள்ளூர் அக் 25 : திருவள்ளூர் மாவட்டம்,  திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2025-26 ஆண்டு பருவ கரும்பு அரைவையை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கரும்பு அரைவை இயந்திரத்திற்குள் கரும்பு கட்டுகளை வைத்து துவக்கி வைத்து பேசினார்.

தமிழக முதல்வர் விவசாயிகளுக்கு என்று தனி துறை ஒதுக்கி அவர்களுக்கு சிறப்பு சேர்த்து அதன் அடிப்படையில் விவசாயிகள் வாழ்வாதாரத்தை உயர்த்தப்பட வேண்டும் என்ற உன்னதமான குறிக்கோளோடு,  மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அந்த காலத்தில் நமக்கு இலவச மின்சாரத்தை அறிமுகப்படுத்தினார்.  அதன் அடிப்படையில் விவசாயிகளுக்கு கொடுத்த முன்னுரிமையின் அடிப்படையில் 2024-25 ஆண்டு 1.55 இலட்சம் டன் கரும்பு வரத்து இருந்தது.
ஆனால் இந்த ஆண்டு தமிழக முதல்வர் கொடுத்த ஊக்கத்தினால் இன்றைய தினம் 2051 விவசாயிடமிருந்து 7505 ஏக்கர்  நிலப்பரப்பில் 2.00 இலட்சம் டன் கரும்பு உற்பத்தி உயர்ந்துள்ளது. அந்த அளவிற்கு தமிழக முதல்வர் சிறப்பான ஆட்சியை கொடுத்திருக்கிறார். சில கோரிக்கைகளை விவசாயிகள் முறையிட்டனர் அக்குறைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் திருத்தணி சட்ட உறுப்பினர் அவர்களுக்கு தெரிவித்து அக்குறைகளை துறை சார்ந்த அமைச்சரிடம் தெரிவித்து தமிழக முதல்வர் நேரடி பார்வைக்கு எடுத்துச் சென்று விவசாயிகளின் தேவைகளுக்கு உரிய தீர்வு காணப்படும். அடுத்த ஆண்டு இன்னும் மிக சிறப்பான மகசூல் இருக்கும் என்றும் அதில் வெற்றி பெற வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.
இதில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் ச.சந்திரன்,கூட்டுறவு சர்க்கரை ஆலை இணைப்பதிவாளரும் செயலாட்சியருமான அ.மீனா அருள், கரும்பு விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares