கோவை இராமநாதபுரம்  சில்க் வில்லேஜ் கைத்தறி மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம்

Loading

கோவை இராமநாதபுரம் பகுதியில் உள்ள 
சில்க் வில்லேஜ் கைத்தறி மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம், உலகத்தரம் வாய்ந்த ஆயுர் வஸ்தரா நேச்சுரல் டையிங் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.. 
கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியில், சில்க் வில்லேஜ் கைத்தறி மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் உலகத்தரம் வாய்ந்த ஆயுர் வஸ்தரா நேச்சுரல் டையிங் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன் மூலமாக கைத்தறி, விசைத்தறி, உள்ளிட்ட நெய்தல் தொடர்பாக பல்வேறு பயிற்சிகளை மேற்கொள்ளுவதுனன், கற்றல் திறனை மேம்படுத்த வழி வகை செய்ய முடியும், இந்த புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சியில், சில்க் வில்லேஜ் கைத்தறி நிறுவனத்தின் தலைவர் கைத்தறி முருகேசன் மற்றும் ஆயுர்வேஸ்ரா நிறுவனத்தின்  தலைவர் தங்க குமார், ஆகியோர் இதற்கான கோப்புகளில் கையேழுத்திட்டு ஒருவருக்கொருவர் பத்திரங்களை மாற்றி கொண்டனர்
இந்த நிகழ்ச்சியில், சில்க் வில்லேஜ் நிர்வாக அதிகாரிகள் பழனிவேல், ராஜாராம், முருகானந்தம், மற்றும் சில்க் வில்லேஜ் நிறுவனத்தின் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0Shares