தொழில் துறைகள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் என்ன? மருந்துத் தொழில்துறையினர் ஆர்வமுடன் பங்கேற்பு!
![]()
புதுவைப்பல்கலைக்கழக வேதியியல் துறை, மருந்துகள் கட்டுப்பாட்டு துறை மற்றும் ஆயுஷ் இயக்குநரகம், புதுச்சேரி அரசு ஆகியவை இணைந்து கல்வித்துறை–தொழில்துறை ஒத்துழைப்பின் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் குறித்த கருத்தரங்கத்தை நடத்தியது.
புதுவைப்பல்கலைக்கழகம், ஆயுஷ் இயக்குநரகம் மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டு துறை ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதையடுத்து, “கல்வி – தொழில் துறைகளில் உள்ள வாய்ப்புகள் மற்றும் சவால்கள்” என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கம் புதுவைப்பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
புதுவைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் பி. பிரகாஷ் பாபு, காஷ்மீர் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஏ. ரவீந்தர் நாத் ஆகியோர் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டு தொடக்க உரை ஆற்றினார்.பாண்டிச்சேரியில் உள்ள ஆயுஷ் இயக்குநரக மூத்த தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஆர். ஸ்ரீதரன், சிறப்புரை ஆற்றினார்.
வேதியியல் துறைத் தலைவர் பேராசிரியர் சி. சிவசங்கர் அவர்கள் விருந்தினர்களையும், பங்கேற்பாளர்களையும் வரவேற்றார். பேராசிரியர் கே. தரணிகராசு (பாடத்திட்ட இயக்குநர்) மற்றும் பேராசிரியர் சிப்நாத் தேப் (டீன்) ஆகியோர் கல்வி–தொழில் ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். இதனைத் தொடர்ந்து, மருந்துத் துறை சார்ந்த நிபுணர்கள் மற்றும் புதுவைப்பல்கலைக்கழக ஆசிரியர்கள் என சுமார் 40 பேர் உரையாற்றினார். இந்தக் கருத்தரங்கின் நிறைவில் பேராசிரியர் ஜெயகுமார் காந்தசாமி நன்றியுரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் கல்வி மற்றும் மருந்துத் தொழில்துறை சார்ந்த பலரும் ஆர்வமுடன் பங்கேற்றனர். விவாதங்களின் மூலம், கல்வி மற்றும் தொழில் துறைகள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் குறித்தும் ஆய்வு செய்து, அதற்கான நீடித்த தீர்வுகள் முன்மொழியப்பட்டன.
இந்த நிகழ்ச்சி சித்தா–யுனானி–ஹோமியோபதி–ஆயுர்வேதா தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் புதுவை மருந்துத் தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன் நடத்தப்பட்டது.

