பன்றி காய்ச்சல்..மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு எச்சரிக்கை!
உதகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றிய அலுவலகவளாகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள் 268 தூய்மை காவலர்களுக்கு தீபாவளி பரிசு தொகுப்புகள் வழங்கும் அடையாளமாக 54 தூய்மை காவலர்களுக்கு தீபாவளி பரிசு தொகுப்பு மற்றும் ஊக்கத்தொகையாக ரூ.1,000/- வழங்கினார்.
நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், உதகை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கடநாடு, தூனேரி, எப்பநாடு, தொட்டபெட்டா, உல்லத்தி, பாலகொலா, முள்ளிகூர், இத்தலார், நஞ்சநாடு, மேல்குந்தா, தும்மனட்டி, கக்குச்சி கூக்கல் ஆகிய ஊராட்சிப்பகுதிகளில் பணிபுரிந்து வரும் 268 தூய்மை காவலர்களுக்கு தீபாவளி பரிசு தொகுப்புகள் வழங்கும் அடையாளமாக 54 தூய்மை காவலர்களுக்கு தீபாவளி பரிசு தொகுப்பாக வேட்டி, சேலை, இனிப்பு வகைகள் மற்றும் ஊக்கத்தொகையாக ரூ.1,000/- வழங்கி, நலன் காக்கும் ஸ்டாலின் முகாமில் அனைவரும் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளீர்களா என கேட்டறிந்து, தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:நீலகரி மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள முதுமலை புலிகள் காப்பக பகுதிகளில் நடத்திய ஆய்வு அறிக்கையில் பன்றி காய்ச்சல் இருப்பதாக தெரிய வந்துள்ளது. உடனடியாக, கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், நீலகிரி மாவட்டத்தில் பன்றி வளர்ப்போர் மற்றும் பண்ணைகள் அமைத்து பன்றிகள் வளர்ப்போருக்கு இந்நோய் குறித்து தெரிந்து கொள்ளும் வகையிலும், எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும்
விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஏற்கனவே அப்பகுதிகளில் கூட்டம் நடத்தப்பட்டது. இந்நோய் பன்றிகளுக்கு மட்டுமே பரவக்கூடியதால் இதர கால்நடை வளர்ப்போர் அச்சப்பட தேவையில்லை. இந்நோய் மனிதர்களுக்கு பரவ கூடியது இல்லை. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எடுக்கப்பட்டுள்ளது எனவும், நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக இரண்டு இடங்களில் சிறிய அளவில் மண் சரிவு ஏற்பட்டது. இதனை உடனடியாக நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் மூலம் சீரமைக்கப்பட்டது. கோத்தகிரி பகுதியில் ஓரிரு இடங்களில் தடுப்புச்சுவர் சேதமாகியுள்ளது. தொடர்ந்து அபாயகரமான பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உதகை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீதரன், அனிதா உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.