ஸ்ரீ ராஜராஜன் பள்ளியில் அறிவியல் கண்காட்சி..ஆர்வமுடன் கலந்துகொண்டு திறமையை நிரூபித்த மாணவர்கள்!

Loading

காரைக்குடி ஸ்ரீராஜராஜன் சிபிஎஸ்இ பள்ளியில், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு, அறிவியல் கண்காட்சி நடைப்பெற்றது.

பள்ளி முதல்வர் சீலா வரவேற்றார். கல்விக்குழும ஆலோசகர், முன்னாள் துணைவேந்தர் எஸ்.சுப்பையா தலைமை வகித்து துவக்கிவைத்து பேசுகையில், ஸ்ரீ ராஜராஜன் கல்வி குழுங்களில் படிக்கும் ஒவ்வொரு மாணவர்களும் திறமையானவர்கள் என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகின்றனர். கல்வி, விளையாட்டு.கலை உள்பட அனைத்து திறமைகளையும் எங்கள் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வளர்த்துவருகிறோம். இளம்வயதிலேயே அறிவியல் சிந்தனைகளை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு அறிவியல் கண்காட்சியை நடத்திவருகிறோம். அதன் ஒருபகுதியாக இந்தாண்டு காரைக்குடி பள்ளிவளாகத்தில் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவியல் கண்காட்சியில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். இக்கண்காட்சியில் 150 வகையான கண்டுபிடிப்புகளை மாணவ, மாணவிகள் பார்வைக்கு வைத்துள்ளது பாராட்டக்கூடியது.

இதற்கு மிகவும் உறுதுணையான இருந்த பள்ளி முதல்வர், அறிவியல் ஆசிரியர்கள். வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை வாழ்த்துகிறோம். மாணவர்களிடம் புதிய சிந்தனையைதூண்டி அவர்களுக்குள் உள்ள திறமைகளை வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதற்கான இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்திவருகிறோம். இக்கண்காட்சியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். சிந்தனை திறன் மிக்க மாணவர்களை உருவாக்குவதே எங்கள் நோக்கம் என்றார்.

ஒருங்கிணைப்பாளர்கள் அறிவியல் ஆசிரியர்கள் ராஜேஸ்வரி, கிரிஷ்டி நிர்மல்குமாரி ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

0Shares