1கோடியே 32 லட்சம் செலவில் அமைக்கும் பணி..எதிர்க்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்தார்.!
கொம்பாக்கம் முதல் உழந்தை ஏரி வரை ரூ. ஒரு கோடியே 32 லட்சம் செலவில் சாலை அமைக்கும் பணியை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் மற்றும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட முருங்கப்பாக்கம் ஏரி மேற்கு கரையின் மேல், கொம்பாக்கம் சாலை முதல் உழந்தை ஏரி பொதுக்கரை வரை தார்சாலை அமைக்க ரூ. ஒரு கோடி 32 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பொதுப்பணித்துறை நீர்பாசன கோட்டம் மூலம் மேற்கொள்ளப்பட உள்ள பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று காலை குப்பம்பேட்டில் நடந்தது.
இதில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா மற்றும் முதலியார்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எல். சம்பத் ஆகியோர் பூஜை செய்து தார்சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை நீர்பாசன கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவிப் பொறியாளர் மதிவாணன், இளநிலைப் பொறியாளர்கள் ஷாம் ஃபெபியன், பிரித்திவிராஜ் மற்றும் ஊர் முக்கியதஸ்தர்கள் கந்தசாமி, ஜெகன்மோகன், சக்திவேல், ரவி, ஆரோக்கியதாஸ், ஜெனா, தேசிகன், பரமசிவம், ஆறுமுகம், பிரபாகரன், பெலிக்ஸ், சதீஷ், கண்ணதாசன், கோபால், நாகராஜ், சம்பத், ஆறுமுகம், கருணாகரன், மாணிக்கம், திமுக பொதுக்குழு உறுப்பினர் செல்வநாதன், ஆதிதிராவிடர் நலக்குழு செல்வநாதன், தொமுச தலைவர் அங்காளன், ஆதிதிராவிட நலக்குழு துணை அமைப்பாளர் காளி, தொகுதி துணைச் செயலாளர் அரிகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் சுப்ரமணி, கிளை நிர்வாகிகள் சபரிநாதன், மிலிட்டரி முருகன், சேகர், முத்து, முருகன், ராமஜெயம், ரகு, கோபி, சிலம்பரசன், மணி, கதிரவன், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.