பலமுறை விண்ணப்பித்தும் எந்த பலனும் இல்லை..கால்கள் செயலிழந்த மாற்றுத்திறனாளி கதறல்!

Loading

திருவள்ளூர் அருகே இரண்டு கால்கள் செயலிழந்த மாற்றுத்திறனாளி ஒருவர் உதவித்தொகை, மூன்று சக்கர மோட்டார் பொருத்தப்பட்ட சைக்கிள் வழங்க கோரிக்கைவிடுத்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் நடுகுத்தகை ஊராட்சி கொமக்கம்பேடு கிராமம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (70) இவரது மனைவி வள்ளியம்மாள் (60).இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.இந்நிலையில் ஜெயராமன் கட்டுமான சித்தாள் வேலைக்கு சென்று அதில் வந்த வருமானத்தை கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தார்.

இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் ஜெயராமனின் இரண்டு கால்களும் செயல் இழந்து விட்டன.80 சதவிகித பாதிப்பு உள்ளது. இதனால் அவரால் எந்த வேலைக்கும் செல்ல முடியவில்லை.இதனால் அவரது மனைவி வள்ளியம்மாள் விவசாய கூலி வேலைக்கு சென்று அதன் மூலம் வரும் வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் ஜெயராமன் மனைக்கட்டையை பயன்படுத்தி நகர்த்தி நகர்த்தி செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று வருகிறார்.இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை கேட்டு பலமுறை விண்ணப்பித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் கடைக்கோ,வேறு எங்கேயாவது செல்லவோ எதுவாக மூன்று சக்கர மோட்டார் பொருத்தப்பட்ட சைக்கிள் கேட்டு உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுத்திருப்பதாகவும் எனவே தமிழக அரசு தனக்கு மூன்று சக்கர மோட்டார் பொருத்தப்பட்ட சைக்கிள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாற்றுத்திறனாளி ஜெயராமன் கேட்டுக் கொண்டார்.

0Shares