கஞ்சா விற்பனை..இளைஞர் கைது..3 கிலோ கஞ்சா பறிமுதல்!

Loading

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கர்நாடக இளைஞர் கைது செய்யப்பட்டார் .அவரிடம் 3 கிலோ கஞ்சா, செல்போன் பறிமுதல் செய்தனர் போலீசார்.

ஆந்திரா, கர்நாடகா போன்ற பிற மாநிலங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் ரயிலில் கஞ்சா கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மேலும் திருவள்ளூரில் இறங்கி விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதனையடுத்து திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ரயில் நிலையம் அருகே திருவள்ளூர் கலால் பிரிவு சப் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த வடமாநில இளைஞரை பிடித்து விசாரணை செய்ததில் அவனிடம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 3 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையில் திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாணவர்கள் மற்றும், ரயில் மூலம் வேலைக்கு செல்லும் இளைஞர்களுக்கு கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததும், கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தை சேர்ந்த மஞ்சுநாத் (34) என்பது தெரியவந்தது.

இதனையடுத்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மஞ்சுநாத்(34) என்ற இளைஞரை கைது செய்து 3 கிலோ கஞ்சாவையும், செல்போனையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

0Shares