பாலியல் புகார்களை முறையாக விசாரிக்க வேண்டும்…பொதுநல அமைப்புகள் வலியுறுத்தல்!
புதுச்சேரி பொதுநல அமைப்புகளின் சார்பாக மனிதநேய மக்கள் சேவை இயக்கத்தின் நிறுவனரும் சட்டமன்ற உறுப்பினருமான கோ.நேரு@ குப்புசாமி MLA அவர்கள் தலைமையில் புதுச்சேரியில் நடைபெறும் அசாதாரண அரசியல் சூழ்நிலை தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் ம் நடைபெற்றது.
இந்த கூட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தோழமைக் கூடல் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் சமூகநல அமைப்பு தலைவர்கள் பல கருத்துக்களை முன் வைத்தனர், நிகழ்வில் மாநிலத் தகுதி, புறவழிச் சாலை சுங்கவரி கட்டணம்,மற்றும் புதுச்சேரியில் நடக்கக்கூடிய அசாதாரண அரசியல் சூழ்நிலைகள் போன்ற கருத்துகள் விவாதிக்கப்பட்டது. முதன்மையாக புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கண் மூடித் தனமான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டது.
1.சனநாயக வழியில் போராடிய மாணவர்கள் மீது போட்ட வழக்கை உடனடியாக திரும்ப பெற வேண்டும்
2.பல்கலைக்கழக மானிய குழு 2015 விதிகளின்படி பாலியல் புகார்களை முறையாக விசாரிக்க உடனே குழு அமைத்திட வேண்டும்
3.மாணவர்களின் மீது மனிதாபிமானம் இல்லாமல் தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4.புதுச்சேரி பல்கலைக்கழகம் மற்றும் காரைக்கால் பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெறுவதாக கூறப்படும் பாலியல் குற்றச்சாட்டுகள் மீது புதுச்சேரி ஆளுநர் உரிய விசாரணை நடத்திட வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தை தமிழர் களம் அழகர் ஒருங்கிணைப்பு செய்தார் கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்களின் பெயர்கள்
லோக ஐயப்பன்திராவிட விடுதலை கழகம்,திரு.மலையாளத்தான் தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள்,
பி.பிரகாஷ்,ராஜா,தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம்,சு.சாமிநாதன்,மாணவர் கூட்டமைப்பு,இரா .முருகானந்தம்,மனித உரிமை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம்,திரு. சம்சுதீன்,இந்திய மஜிலிக் கட்சி
திரு.கணேஷ்ஆம் ஆத்மி.பஷீர்பி போல்டு கூட்டமைப்பு.தெ.வ.அறிவுமணி.ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் கட்சி.
ஜெ.பிராங்கிளின் இயற்கை மன்றும் கலச்சார புரட்சி இயக்கம் .ப.சரவணன்
புதுவை மக்கள் தமிழ்ச் சங்கம்,இரா .வேலுச்சாமிதமிழ் தேசிய பேரியக்கம்,ஆ.பாவாடைராயன்
அம்பேத்கர் தொண்டர் படை.புதுவைதமிழ் நெஞ்சம்புதுச்சேரி எழுத்தாளர் கழகம்.இன்னும் பல அமைப்புத் தலைவர்களும் அதன் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.