குன்னூர் உபாசி வளாகத்தில் கரடிஅட்டகாசம்
குன்னூர் உபாசி வளாகத்தில் கரடிஅட்டகாசம்
உபாசி வளாகத்தில் மீண்டும் மீண்டும் கரடி அட்டகாசம். 11-வது முறையாக உபாசி வளாகத்திற்கு வந்தது. வனத்துறையின் கூண்டு இருந்தும், கரடி அதில் சிக்கவில்லை. நேற்று அதிகாலை சுமார் 1 மணி நேரத்திற்க்கு மேல் உபாசி வளாகத்தில் உள்ள சிமெண்ட் கற்களை பெயர்த்து எடுத்து கரையான்களை சாப்பிட்டு சென்றுள்ளது. 4 நாட்களுக்கு முன்பு, உபாசி வளாகத்தில் உள்ள 2 அலுவலர்களின் வீடுகளின் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்து பொருட்களை நாசம் செய்தது. நல்வாய்ப்பாக, அந்த சமயம் 2 அலுவலர்களும் விடுமுறை காரணமாக வெளியூர் சென்றிருந்தனர்.
இதன்பின் வனத்துறை கரடியை பிடிக்க கூண்டு வைத்தனர். ஆனாலும், கரடி அதன் அருகில் கூட செல்லாமல், சுமார் ஒரு மணி நேரம் மற்ற இடங்களில் சுற்றி திரிந்தது. இந்த முறை பொது மக்கள் நடமாடும் நேரமான காலை 5.30 மணி வரை கரடி உபாசி வளாகத்தில் சுற்றி திரிந்தது வளாகத்தில் குடியிருக்கும் மக்களுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து கரடியை பிடிக்க ஆவண செய்யவேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை.