செய்தியாளர் பயணத்தின் போது நேரில் பார்வையிட்டு ஆய்வுமாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு
நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியம், பாலக்கொலா, இத்தலார், நஞ்சநாடு ஆகிய ஊராட்சிப்பகுதிகளில் ரூ.3.71 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு ., அவர்கள் செய்தியாளர் பயணத்தின் போது நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் மாவட்ட தெரிவித்ததாவது:-ஆட்சித்தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, நீலகிரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில், உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில், பாலக்கொலா ஊராட்சி தேவர்சோலை பகுதியில் முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டுமான திட்டத்தின் கீழ் ரூ.1.85 இலட்சம் மதிப்பில் வீடுகள் பழுது பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோன்று மஞ்சக்கொம்பை பகுதியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 இலட்சம் மதிப்பில் வீடு கட்டப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் விரைவில் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், பணிகளை கண்காணிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மஞ்சக்கொம்பை பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.1.05 இலட்சம் மதிப்பில் மரம் நடும் பணியினையும், கைக்காட்டி மற்றும் மந்தனை பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.8 இலட்சம்மதிப்பில் கட்டப்பட்டு வரும் பயணியர் நிழற்குடை பணியினையும், மந்தணை பகுதியில் ஸ்வச் பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் மூ.4.83 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் மினி சிஎஸ்சி கட்டடத்தினையும், ரூ.3.50 இலட்சம் மதிப்பில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் வீடு கட்டும் பணியினையும், தங்காடு பகுதியில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.13.70 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் தடுப்புச்சுவர் பணியினையும், ராஷ்டிரிய கிராம ஸ்வராஜ் அபியான் திட்டத்தின் கீழ் ரூ.5 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பொது சேவை மைய கட்டடத்தினையும், இத்தலார் ஊராட்சி பீ மணியட்டியில் எஸ்ஏஎஸ்சிஐ திட்டத்தின் கீழ் ரூ.3 கோடி மதிப்பில் துளித்தலை முதல் பீ மணியட்டி வழி தர்மாதோப்பு சாலை பணியினையும், கண்ணகி மந்து பகுதியில் பிஎம் ஜென்மம் திட்டத்தின் கீழ் ரூ.5.73 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வீட்டினையும், சுரேந்தர் நகர் பகுதியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வீட்டினையும், இத்தலார் ஊராட்சி காவிலோரை பகுதியில் ஒருங்கிணைந்த தொகுப்பு வீடு திட்டத்தின் கீழ் ரூ.17.50 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ராதாகிருஷ்ணன் வீட்டினையும், நஞ்சநாடு ஊராட்சி எம் பாலாடாவில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வீட்டினையும் என மொத்தம் ரூ.3.71 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இச் செய்தியாளர் பயணத்தின் போது உதகை வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதரன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.