சிறுபான்மை இன மக்களின் சொத்துக்களை அபகரிக்க முயல்வதா?இந்திய தேசிய லீக் கண்டனம்!
![]()
கோவையில் இந்திய தேசிய லீக் ஆலோசனை கூட்டம், நடைபெற்றது இதில், இதன் தேசிய தலைவர் முகம்மது சுலைமான் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
இந்திய தேசிய லீக் இன் மாநில ஆலோசனை கூட்டம் கோவை போத்தனூர் பகுதியில் உள்ள ஆனந்தம் மகால் அரங்கில் நடைபெற்றது. இதில் மாநில,மாவட்ட நிர்வாகிகளின் செயல்பாடுகள் மற்றும் வரும் சட்டமன்ற தேர்தலை சந்திப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு. இந்திய தேசிய லீக்கின் மாநில துணை தலைவர் அஷ்ரப் அலி ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இதில்,மாநில தலைவர் நாகூர் ராஜா தலைமை தாங்கினார்..
நிகழ்ச்சியில்,இந்திய தேசிய லீக் தேசிய தலைவர் முகம்மது சுலைமான் மாநில,மாவட்ட நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்..
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,அரசியல் அளவில் தென்னிந்திய மக்கள் குறிப்பாக தமிழக மக்கள் எப்போதும் தெளிவாக இருப்பவர்கள் என விமர்சித்த அவர்,மத்தியில் ஆளும் பா.ஜ.க.அரசின் நாடகங்கள் ஒரு போதும் தமிழக மக்களிடம் எடுபடாது என தெரிவித்தார்..
வாக்கு திருட்டு மோசடி தொடர்பாக ராகுல் காந்தியின் போராட்டம் வலு பெற்று வருவதாக கூறிய அவர்,விரைவில் வாக்கு திருட்டில் பா.ஜ.க.வின் மோசடிகள் வெளிப்படும் என அவர் கூறினார்…
இஸ்லாமிய சொத்துகளை அபகரிக்கும் நோக்கத்தில் வக்பு திருத்தம் தொடர்பான சட்டத்தை கொண்டு வர நினைக்கும் ஒன்றிய பா.ஜ.க.அரசு இந்த வரிசையில் அனைத்து சிறுபான்மை இன மக்களின் சொத்துக்களை அபகரிக்க முயல்வதாக அவர் கூறினார்..
கூட்டத்தில்,இந்திய தேசிய லீக் மாநில பொது செயலாளர் சையது சதான் அகமது,மாநில துணை தலைவர் ஆம்பூர் பஷீர் அஹமத்,மாநில செயலாளர்கள் கோவை சிராஜ்தீன்,பண்ருட்டி கான் உட்பட பலர் கலந்து கொண்டனர்..

