“ஹெல்மெட் ” விழிப்புணர்வு..! அறிவுரை கூறி இனிப்பு வழங்கிய ஈரோடுஎஸ் பி..
“ஹெல்மெட் ” விழிப்புணர்வு..! அறிவுரை கூறி இனிப்பு வழங்கிய ஈரோடுஎஸ் பி..!
ஈரோடு அக்டோபர் 6
தமிழகத்தில் ஹெல்மெட் அணிவதை மக்கள் உணரும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையினரை அரசு வலியுறுத்தி வந்தது அதன் தொடர்ச்சியாக
ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலைய சரகத்தில் 100 இடங்களை தேர்வு செய்து காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து தலைக்கவசம் அணிவதின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஈரோடு காளைமாட்டு சிலை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு சாக்லேட் வழங்கியும் அணியாமல் வந்தவர்களுக்கு தலைக்கவசம் அணிவதின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தும் மற்றும் சிறுவர்கள் வாகனத்தை ஓட்ட பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது என்றும் யாரும் உரிய லைசென்ஸ் பெறாமல் வாகனத்தை ஓட்ட கூடாது என்றும் அறிவுரைகளை வழங்கினார்.
மற்றும் மற்ற காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு நடத்தப்பட்டது. என்ற விவரம் மாவட்ட காவல்துறையின் செய்து பிரிவு வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.