பாடியநல்லூர் பேருந்து நிலையம்” அமைப்பதற்கான பணிகள் : அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார் :

Loading

வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ சார்பில் கட்டப்படவுள்ள “பாடியநல்லூர் பேருந்து நிலையம்” அமைப்பதற்கான பணிகள் : அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார் :

திருவள்ளூர் அக் 02 : திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் சட்டமன்ற தொகுதியில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சி.எம்.டி.ஏ. சார்பில் “பாடியநல்லூர் பேருந்து நிலையம்” அமைப்பதற்கான பூமி பூஜையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும தலைவருமான பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டு, பணிகளை தொடங்கி வைத்தார்.தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி சிஎம்டிஏ சார்பில் ரூபாய் 200 கோடி மதிப்பீட்டில் 11 மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலையங்கலான திரு.வி.க. நகர், பெரியார் நகர், தண்டையார்பேட்டை, முல்லை நகர், கண்ணதாசன் நகர், அம்பத்தூர், திருவான்மியூர், ஆவடி, அய்யப்பன்தாங்கல், வள்ளலார் நகர் மற்றும் பாடியநல்லூர் ஆகிய பேருந்து நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு, அதில் அண்மையில் திரு.வி.க. நகர் மற்றும் பெரியார் நகர் ஆகிய 2 பேருந்து நிலையங்கள் முதலமைச்சரால் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டது.மேலும், தண்டையார்பேட்டை, முல்லை நகர், கண்ணதாசன் நகர் மற்றும் அம்பத்தூர் ஆகிய பேருந்து நிலையங்கள் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்காக அற்பணிக்கப்படவுள்ளது. திருவான்மியூர், ஆவடி, அய்யப்பன்தாங்கல் மற்றும் வள்ளலார் நகர் ஆகிய பேருந்து நிலையங்களின் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக மாதவரம் சட்டமன்ற தொகுதியில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சி.எம்.டி.ஏ. சார்பில் “பாடியநல்லூர் பேருந்து நிலையம்” அமைப்பதற்கான பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக்குழும தலைவருமான பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

இதில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலரும் முதன்மைச் செயலாளருமான கோ.பிரகாஷ், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், தலைமை பொறியாளர் மகாவிஷ்ணு, கண்காணிப்புப் பொறியாளர் ராஜன்பாபு, எம்டிசி பொது மேலாளர் (இயக்கம்) நெடுஞ்செழியன், அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0Shares