நெல்லிதோப்பு தொகுதியில்அவலநிலையில் ..முன்னாள் MLA வேதனை!

Loading

புதுவை நகராட்சி ஆணையர் அவர்களுக்கு அதிமுக உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் திரு.ஓம்சக்தி சேகர் அவர்கள் அனுப்பியுள்ள கோரிக்கை மனு அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:புதுவை நெல்லிதோப்பு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நகராட்சி மூலம் நடைபெறும் பணிகள் மந்த கதியிலும், ஆரம்பிக்கப்பட்ட பணிகள் தொடங்கப்படாத நிலை உள்ளது. அதில் ஒரு சில பணிகளை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வந்து விரைந்து பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

1) கே சி நகர் பகுதியில் கழிப்பிடம் பொதுமக்கள் கோரிக்கையை தொடர்ந்து புதிதாக கட்டப்பட்டு 15 நாட்கள் ஆகியும் இதுவரை திறக்கப்படவில்லை.

2) நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது கடுமையான போராட்டத்தின் விளைவாக கட்டப்பட்ட சக்தி நகர் சமுதாய நலக்கூடம் திறக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகியும் இதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. உடனடியாக அதனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும்,மழைக்காலம் நெருங்குவதால் இந்த சமுதாய நல கூடம் மக்களை தங்க வைக்கவும்,மழைக்காலங்களில் மக்கள் பயன்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

3) சக்தி நகர் மூன்றாவது தெரு பல ஆண்டுகளாக இருந்த கழிப்பிடம் இடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் அந்த இடத்தில் பணிகள் இதுவரை துவங்கப்படவில்லை. அப்பகுதி மக்களை கலந்த ஆலோசித்து அப்பகுதி மக்களின் தேவைக்கேற்ப உரிய பணிகள் அங்கு துவக்கப்பட வேண்டும்.

4) குயவர்பாளையம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வீதியில் அமைந்துள்ள பாழடைந்த கழிப்பிடம் எந்தவித மக்கள் பயன்பாட்டிற்கும் இல்லாமல் வீணாகி வருகிறது. இதனையும் உடனடியாக ஆய்வு செய்து பாழடைந்த கட்டிடத்தை இடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

5) சத்யா நகர்4, 5,6 ஆகிய தெருக்களில் விடுபட்டுள்ள கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்.

மேற்கூறிய பணிகளை தாங்கள் சிறப்பு கவனம் கொண்டு விரைவில் நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

0Shares