90-வது பிறந்த நாள்: டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவிடத்தில் மரியாதை!

Loading

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப் படத்துக்கு தினத்தந்தி குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்த தினத்தந்தி அதிபர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 90-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, சென்னை போயஸ் கார்டனில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் அவரது உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப் படத்துக்கு தினத்தந்தி குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மாலதி சிவந்தி ஆதித்தன், தினத்தந்தி குழும இயக்குனர்கள் பா.சிவந்தி ஆதித்தன், பா.ஆதவன் ஆதித்தன், அனிதா குமரன், சம்யுக்தா சிவந்தி ஆதித்தன் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

அதைத் தொடர்ந்து, தினத்தந்தி, டி.டி. நெக்ஸ்ட், மாலைமலர், ராணி, ராணி முத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., தந்தி டி.வி., சுபஸ்ரீ, இந்தியா கேப்ஸ், ஏ.எம்.என். டிவி, கோகுலம் கதிர், பாரோஸ் ஓட்டல் ஆகியவற்றின் நிர்வாகிகளும், ஊழியர்களும் மரியாதை செலுத்தினார்கள்.

இதேபோல், அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் பலர் நேரில் வந்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாாகள்.

0Shares