ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ப நடிக்க போகிறேன்- நடிகை ஸ்ரேயா!

Loading

நடிகை ஸ்ரேயா தற்போது படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் தலைகாட்டி வருகிறார்.

2003ம் ஆண்டு வெளியான எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் தமிழ் திரையிலகுக்கு அறிமுகமானவர் ஸ்ரேயா. தமிழில் ரஜினிகாந்த், விஜய், விக்ரம், தனுஷ் உள்ளிட்ட முன்னனி நடிகர்களுடன் இனைந்து நடித்துள்ளார்.

இவர் தனது நீண்ட நாள் காதலரான ஆன்ட்ரு கோச்சேவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்தார். தற்போது படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் தலைகாட்டி வருகிறார்.

இதற்கிடையில் ‘ரெட்ரோ’ படத்தில் குத்தாட்டம் போட்டும் கலக்கினார். அடுத்தடுத்த படங்களிலும் அவர் குத்தாட்டம் போடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், நடிகை ஸ்ரேயா ‘‘ரசிகர்களுக்கு விருப்பமானதை கொடுத்தால் அவர்கள் நம்மை விரும்புவதை விட மாட்டார்கள். அடுத்தடுத்து ரசிகர்களின் விருப்பத்திற்குரிய வகையில் நடிக்க போகிறேன்’’, என்று தெரிவித்துள்ளார். 43 வயதிலும் அவருக்குள்ள நம்பிக்கை முன்னணி நடிகைகளை வியப்பில் ஆழ்த்துகிறதாம்.

0Shares