பள்ளிகளில் செல்போன் ….ஆசிரியர்களுக்கு, கல்வித்துறை அதிரடி உத்தரவு!

Loading

பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டு இருக்கிறது. இருப்பினும் பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவது தெரியவந்தால், அதை தலைமை ஆசிரியரோ, ஆசிரியரோ பறிமுதல் செய்து பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும்.

இது குறித்து, பள்ளிகளுக்கு, கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-சாதி அல்லது வகுப்புவாத எண்ணங்களை மாணவர்களிடையே ஏற்படுத்த முயலும் ஆசிரியர் மீது பெறப்படும் புகார்கள் குறித்து முதன்மைக்கல்வி அலுவலர் விசாரணை மேற்கொள்வதோடு, சம்பந்தப்பட்ட ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும்.

மாணவர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வழங்கக்கூடிய கல்வி உதவித் தொகை விவரங்கள் ரகசியமாக பராமரிக்கப்படுவது மிக மிக அவசியம். இந்த விவரங்களை பொதுவெளியில் தெரியும் வகையில் இருக்கவேண்டும் .

பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டு இருக்கிறது. இருப்பினும் பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவது தெரியவந்தால், அதை தலைமை ஆசிரியரோ, ஆசிரியரோ பறிமுதல் செய்து பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும். மாணவர் மனசு’ புகார் பெட்டியை வாரம் ஒரு முறை பள்ளி மேலாண்மைக்குழு தலைவர், தலைமை ஆசிரியர் முன்னிலையில் திறந்து, அதில் உள்ள தபால்களின் எண்ணிக்கையை பதிவு செய்து, அதுகுறித்து விசாரணை செய்து மாவட்டக்கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் சமர்ப்பிக்கவேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0Shares