அரசு பேருந்துகளில் செல்லும் பயணிகள் உணவு மற்றும் தேநீர் அருந்துவதற்கு தரமான தனியார் உணவகத்தில் அரசு பேருந்துகளை நிறுத்த அறிவரை

Loading

நீலகிரி மாவட்ட அரசு போக்குவரத்து கழகம்  உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் கோவை   மற்றும்
 கோவை, மேட்டுப்பாளையம் பகுதிகளில் இருந்து உதகைக்கும் அரசு பேருந்துகள் செல்கின்றன இந்த நிலையில் நீலகிரி மாவட்ட
  அரசு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும்  பயணிகள் உணவு உட்கொள்வதற்கும், டீ குடிப்பதற்கும், மேட்டுப்பாளையம் கல்லார் சாலையில் அமைந்துள்ள,. ஹோட்டல் ஆனந்தாஸ் பகுதியில் அரசு பேருந்துகள்  நிறுத்தப்படும் நிலையில்,
 நேற்று மதியம் (திங்கள்கிழமை)
TN-43 N-0816 அரசு பேருந்து இந்த உணவகத்தில் நிறுத்தப்பட்டது இந்த உணவகத்தில் தேநீர் டோக்கன் ரூ.20. வாங்கி கொடுத்தால் எப்போதோ போட்டு வைத்த டீயினை அங்கு பணியாற்றும் ஊழியர்கள்
பயணிகளுக்கு இந்த டீ எடுத்து கொள்ளுங்கள் என்கிறார்கள் .
பழைய டீ வேண்டாம் என பயணிகள் சொன்னால்
 பயணிகளை திட்டுகின்றனர். நெடுந்தூரம் அரசு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் உணவு உட்கொள்வதற்கும், தேநீர் அருந்துதற்கும்  தரமான தனியார்  உணகத்தில் நிறுத்த.  நீலகிரி மாவட்ட அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு அறிவுரை வழங்குமா, நீலகிரி மாவட்ட அரசு போக்குவரத்து கழகம்!
பயணிகள் சமூக ஆர்வலர்கள் கேள்வி?
0Shares