”அம்மா” கதாபாத்திரம்..மனம் திறந்த ஸ்ரேயா சரண்!
![]()
மிராய் படத்தில் ஹீரோவுக்கு அம்மாவாக ஸ்ரேயா சரண் நடித்திருக்கிறார்.
நடிகை ஸ்ரேயா சரண் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழியில் பல வெற்றிப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் இவர் சிவாஜி, அழகிய தமிழ் மகன், கந்தசாமி, குட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் ரெட்ரோ படத்தில் நடித்திருந்தார்.
தற்போது தெலுங்கில் மிராய் படத்தில் ஹீரோவுக்கு அம்மாவாக நடித்திருக்கிறார். இப்படம் செப்டம்பர் 12-ம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், ”அம்மா” கதாபாத்திரங்களில் நடிப்பது குறித்து ஸ்ரேயா சரண் பேசி இருக்கிறார். அவர் பேசுகையில், ”கதாபாத்திரங்கள் உறுதியாக இருக்கும் வரை, இளைய ஹீரோக்களுக்கு அம்மாவாக நடிப்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை” என்றார்.
“மிராய்” படத்தில், தேஜா சஜ்ஜாவின் அம்மாவாக நடித்திருக்கும் ஸ்ரேயா சரண், முன்னதாக ராஜமவுலியின் ஆர்ஆர்ஆரில், அவர் அஜய் தேவ்கனின் மனைவியாகவும், ராம் சரணின் அம்மாவாகவும் நடித்திருந்தார். ராம் சரணுடனான அவரது திரை நேரம் குறைவாக இருந்தபோதிலும், கதையில் அந்த வேடம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

