ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப் பெற்றது.. நாளை அதிகாலை கரையை கடக்கும்!
![]()
வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா கடற்கரையையொட்டி நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது,காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஒடிசா-வடக்கு ஆந்திரா அருகே நாளை அதிகாலை கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை கேரளாவில் கடந்த ஜூன் மாதம் தொடக்கத்திலேயே பெய்ய தொடங்கியது.இதனால் தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர் ,திண்டுக்கல், கன்னியாகுமரி ,நெல்லை, பாபநாசம்,, தென்காசி போன்ற மேற்கு தொடர்ச்சி மலைகளில் கனமழை பெய்து பெய்தது, இந்த மழையானது தொடர்ந்து கேரளாவில் பெய்து வந்ததால் அதன் தாக்கம் தமிழகத்திலும் காணப்பட்டது ,
இந்தநிலையில் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நேற்றைய தினம் வடதமிழகத்தில் பரவலாக மழை பெய்தது.ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்தது.
இந்த நிலையில், வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா கடற்கரையையொட்டி நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஒடிசா-வடக்கு ஆந்திரா அருகே நாளை அதிகாலை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

