நாளை சுதந்திர தினம்.. ரயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை!
சுதந்திர தினத்தை முன்னிட்டு ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் மற்றும் தமிழ்நாடு போலீசார் இணைந்து பயணிகளிடம் சோதனை நடத்தினர்.
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆறு நடை மேடைகளிலும் தீவிர சோதனை.. சுதந்திர தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு மக்கள் அதிகம் கூடும் ரயில் நிலையம், பஸ் நிலையம், வழிபாட்டு தலங்கள், சந்தைகள், வணிக வளாகங்களில், பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து தென்னக ரயில்வே முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர் அருள்ஜோதி, கோட்ட பாதுகாப்பு ஆணையர் ராமகிருஷ்ணா, உத்தரவின் பேரில் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் திருவள்ளூர் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் சித்ராதேவி தலைமையிலான காவலர்கள், பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் (இருப்பு பாதை) தமிழ்நாடு. திருவள்ளூர் ரயில் நிலையம் உதவி ஆய்வாளர் ஆனந்தன் மற்றும் பாதுகாப்பு காவல்துறை வெடிகுண்டு சோதனை கருவி கொண்டு ஆறு நடைமேடை களிலும் மற்றும் மின்சார ரயில்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சோதனை ரயில் நிலைய நுழைவாயில் மற்றும் ரயில் நிலைய வளாகம் முழுதிலும் பயணியர் அமரும் இடம், டிக்கெட் வழங்கும் இடம், நடைமேடை, குப்பைத்தொட்டி, கடைகள், ஆட்டோ ஸ்டாண்ட், சைக்கிள் ஸ்டாண்ட், மின்சார ரயில் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனைகள் பயணிகள் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் சந்தேகப்படும்படியாக தனிப்பட்ட முறையில் சூட்கேஸ் பைகள் போன்றவை இருந்தால் அவற்றை தொடக்கூடாது என்றும் உடனடியாக காவல்துறைக்கு 139 என்ற எண்ணிற்கு தெரிவிக்க வேண்டும் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சோதனையில் 20 க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்..