நிர்வாக சீர்திருத்த துறை செயல்படுகிறதா? அரசுக்கு பத்து ரூபாய் சட்ட இயக்கம் கேள்வி !

Loading

நிர்வாக சீர்திருத்த துறை நிர்வாக சீர்கேடுகளை பற்றி துணைநிலை ஆளுநர் அவர்கள் கவனிக்க வேண்டும் என்று புதுச்சேரி பத்து ரூபாய் சட்ட இயக்கம் நிறுவனர் ரகு என்கின்ற ரகுநாதன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:புதுச்சேரியில் நிர்வாகம் மற்றும் பணியாளர் சீர்திருத்தத் துறை ஒன்று புதுச்சேரியில் செயல்படுகிறதா என்று தெரியவில்லை. ஏனென்றால் புதுச்சேரியில் உயர் அதிகாரிகள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்ய வேண்டும். இது போல் புதுச்சேரியில் நடைமுறையில் உள்ளதா இல்லையா ஒரு அதிகாரி ஒரு துறைக்கு வந்தால் அவர் பணி ஓய்வு பெறும் வரை அதுவே துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்,

அந்த அளவிற்கு ஒரு மோசமான துறை என்றால் அது நிர்வாக சீர்திருத்தத் துறை அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் திரு ரமேஷ் அவர்களுக்கு (JO ) கணக்கு அதிகாரியாக பதவி உயர்வு கொடுத்து இரண்டு ஆண்டு காலம் ஆகிறது ,இதுவரை உள்ளாட்சித் துறையை இயக்குனர் அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏனென்றால் ஆணையராக இருந்தால் பல வழியில் வருமானம் பல முறைகேடுகள் தவறான முறையில் உரிமை வழங்குவது நான்கு ஆண்டு காலமாக ஒரே ஒப்பந்ததாரருக்கு அதிக பணி வழங்குவது ஒப்பந்ததாரரை கை வசத்தில் வைத்துக் கொள்வது.

அது மட்டுமா பேனர் கலாச்சாரம் சபாநாயகர் பேனர் எங்கிருந்தாலும் எடுப்பதில்லை. ஏனென்றால் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் விசுவாசம் ஆட்சியாளர் கைவசத்தில் நமது அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் உள்ளார். நீண்டகால வாழ்ந்த வீட்டை இடித்து முள்வேலி அமைத்த ஆணையர் ரமேஷ் எதற்காக திருமண மண்டபத்திற்கு பார்க்கின் வசதிக்காக இதை போல ஒரு கேவலமான செயல் புதுச்சேரி அரியாங்குப்பத்தில் மட்டும் தான் நடக்கும் நேரில் வந்து விசாரணை செய்தால் பல உண்மை தகவல்கள் கிடைக்கும்.

நமது ஆணையர் அவர்கள் சத்தியமான உண்மை சிபிஐ இந்த துறை முழுவதும் ஆய்வு செய்தால் பல உண்மை தகவல்கள் கிடைக்கும். உண்மையா பொய்யா விவாதம் நடத்த நான் தயார் எந்த மீடியாவானாலும் வரலாம் புதுச்சேரியில் இந்த அரசு வந்த பிறகு வளர்ச்சி பாதையில் செல்கிறதா சீரழிவு பாதையில் செல்கிறதா சேட்டிலைட் தொலைக்காட்சி நேரடியாக விவாதம் நடத்த தயாராக இருந்தால் நான் தகவல் கொடுக்க தயாராக உள்ளேன். கொம்யூன் பஞ்சாயத்து முழுவதும் சிசிடி கேமரா உள்ளது அவர் அறையில் ஏன் இல்லை. ஆட்சியாளருக்கு முழுக்க முழுக்க ஜால்ரா அடித்துக் கொண்டிருக்கிறார். துணைநிலை ஆளுநர் அவர்கள் இந்த நிர்வாக சீர்திருத்த துறை நிர்வாக சீர்கேடுகளை பற்றி கவனிக்க வேண்டும் என்று புதுச்சேரி பத்து ரூபாய் சட்ட இயக்கம் சார்பில் வலியுறுத்துகிறோம் என அவர் கூறியுள்ளார்.

0Shares