கொத்தனார் குத்தி கொலை.. பெரிய குளத்தில் பதட்டம்.. போலீஸ் குவிப்பு!
பெரிய குளம் அருகே கொத்தனார் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை அப்பகுதியில்ஏற்படுத்தி உள்ளது .
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை தெற்கு புதுத் தெருவில் வசித்து வரும் செல்வகுமார் இவரது மகன் துளசி மணி வயது 28 இவர் கொத்தனாராக பணி புரிந்து வருகிறார் .சம்பவத்தன்று நேற்று நள்ளிரவு இவர்கள் தெருவில் உள்ள சமுதாயக் கூடத்தில் சமுதாயம் சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது .
இந்த கூட்டத்தில் இதே பகுதியைச் சேர்ந்த முத்தையா வயது 36 இவரது அக்கா மகன் தங்கப்பாண்டி வயது 24 இவர்கள் ரெண்டு பேரும் கலந்து கொண்டனர் .இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் முத்தையாவிற்கும் துளசி மணிக்கும் சங்க கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது .வாக்குவாத முற்றவே ஆத்திரமடைந்த முத்தையாமற்றும் இவரது அக்கா மகன் தங்கப்பாண்டி இருவரும் சேர்ந்து தான் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து துளசி மணியை மாறி மாறி பல்வேறு இடங்களில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
ரத்த வெள்ளத்தில் துளசி மணி சம்பவ இடத்திலேயே பலியானார். இச்ச சம்பவம் தொடர்பாக பெரியகுளம் தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தேடி வருகிறனர். நள்ளிரவில் மெயின் பகுதியில் ஏற்பட்ட இந்த சம்பவத்தால் பெரிய குளத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுஅப்பகுதியில் பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.