கழிவுநீர் வாய்க்கால் சீரமைப்பு பணி.. எம்எல்ஏ அனிபால் கென்னடி நேரில் ஆய்வு!

Loading

புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 2.85 கோடி மதிப்பீட்டில் துவங்கப்பட்ட கழிவுநீர் வாய்க்கால் சீரமைப்பு பணிகளை உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கடலூர் ரோட்டில் இருந்து வாணரப்பேட்டை, தாமரை நகர், அமலோற்பவன் பள்ளி, இந்திராநகர் வழியாக சென்று உப்பனாற்றில் கலக்கும் இந்த நீண்ட வாய்க்கால், பராமரிப்பின்றி இருந்ததால் துர்நாற்றம் வீசி சுகாதார பாதிப்பு ஏற்பட்டதாக பொதுமக்கள் முறையிட்டிருந்தனர்.

இதுகுறித்து, கடந்த ஜூன் மாதம் சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் சம்பவ இடத்தில் பொது பணி துறை நீர் பாசன பிரிவு செயற் பொறியாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் உதவி பொறியாளர் மதிவாணன் ஆகியோரை அழைத்து முழுமையான ஆய்வு நடத்தினார். அப்போது, வாய்க்காலை தூர்வாரி சுத்தம் செய்து, மீதமுள்ள இடங்களில் சிமெண்ட் கட்டைகள் அமைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அதற்கு அதிகாரிகள், தூர்வாரும் பணி உடனடியாகத் தொடங்கி, 20 நாட்களில் சிமெண்ட் கட்டைகள் அமைக்கும் பணி முடிக்கப்படும் என உறுதியளித்தனர்.

தற்போது, அந்தப் பணி தீவிரமாக நடைபெற்று வருவதையடுத்து, சட்டமன்ற உறுப்பினர் இன்று மீண்டும் கல்லறை வீதி அமலோற்பவன் பள்ளி அருகில் உள்ள பாலம் கீழ் நடைபெறும் பணியை நேரில் சென்று முன்னேற்றத்தை ஆய்வு செய்தார். உடன் தொகுதி செயலாளர் சக்திவேல், அவை தலைவர் ஹரிகிருஷ்ணன், மாநில பிரதிநிதி கணேசன், கிளை செயலாளர்கள் சந்துரு, ராகேஷ், சகோதரி கலா ஆகியோர் உடன் இருந்தனர்.

0Shares