தமிழ்நாட்டில் தனது செயலிருப்பை வலுப்படுத்தும் ஃபெனிஸ்டா..11வது கிளை திறப்பு!

Loading

சென்னையில் 11வது மற்றும் இம்மாநிலத்தில் 23வது ஷோரூமை திறந்திருப்பதன் மூலம் தமிழ்நாட்டில் தனது செயலிருப்பை வலுப்படுத்தும் ஃபெனிஸ்டா .

ப்ரீமியம் ஜன்னல்கள் மற்றும் கதவுகளுக்காக இந்தியாவின் அதிக நம்பிக்கைக்குரிய பிராண்டு என புகழ்பெற்றிருக்கும் ஃபெனிஸ்டா, தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாநகரின் ஒரு முக்கிய இடமான கொளத்தூரில் மற்றுமொரு புதிய ஷோரூமை திறந்திருக்கிறது. இதன்மூலம் இம்மாநகரில் தனது சில்லறை விற்பனை செயல்பாட்டை மேலும் வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும். ஸ்ரீ பத்ரா அசோஸியேட்ஸ் என்ற ஃபிரான்சைஸ் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் இந்த ஷோரூம், எண்.15& 16, மல்லிகை அவென்யூ மெயின் ரோடு, கொளத்தூர், சென்னை–600099 என்ற முகவரியில் அமைந்திருக்கிறது. நாடெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு உலகத் தரத்திலான ஃபெனெஸ்ட்ரேஷன் தீர்வுகளை அவர்கள் இல்லங்களுக்கு அருகிலேயே கிடைக்குமாறு வழங்க வேண்டும் என்ற ஃபெனிஸ்டாவின் செயல்திட்ட பயணத்தில் இந்த புதிய ஷோரூம் தொடங்கப்பட்டிருப்பது மற்றுமொரு முன்னேற்ற நிகழ்வாகும்.

புதிதாக திறக்கப்பட்டுள்ள ஷோரூம், நவீன வடிவமைப்புகள் மற்றும் முடிவில்லாத சாத்தியங்களை உள்ளடக்கிய ஃபெனிஸ்டாவின் விரிவான தொகுப்பின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு முழுமையான இனிய அனுபவத்தை வழங்கும். ஃபெனிஸ்டாவின் தயாரிப்புகளது தொகுப்பில் uPVC மற்றும் அலுமினியம் ஜன்னல்கள் மற்றும் கதவுகள், திடமான பேனல் கதவுகள், கதவு முகப்புகள், ப்ரீமியம் ஹார்டுவேர் ஆகியவை இடம்பெறுகின்றன. ஸ்டைலான, நிலைத்து நீண்டகாலம் உழைக்கக்கூடிய மற்றும் ஆற்றல் திறன் மிக்க தீர்வுகளைப் பெற விரும்பும் வீட்டு உரிமையாளர்கள், கட்டுமானக் கலை நிபுணர்கள் மற்றும் கட்டிட பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கும் நோக்கத்தோடு இந்த ரீடெய்ல் ஷோரூம் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

ஃபெனிஸ்டாவின் பிசினஸ் ஹெட் திரு. சாகெத் ஜெயின் ஷோரூம் தொடக்கவிழாவில் பேசுகையில், “முற்போக்கு சிந்தனையுடன், சிறந்த வடிவமைப்புகளுக்கு பேராதரவு வழங்கி வரும் பெருநகரமான சென்னையின் ஒரு முக்கிய பகுதியான கொளத்தூரில் எமது புதிய ஷோரூமை நாங்கள் தொடங்கியிருக்கிறோம். இவ்வகையினத்தில் மிகச்சிறந்த தயாரிப்புகள் மற்றும் பிரத்யேகமான சேவைகள் வழியாக இப்பகுதியிலுள்ள

வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றுவதில் நாங்கள் கொண்டிருக்கும் அக்கறையையும், அர்ப்பணிப்பையும், ஸ்ரீ பத்ரா அசோஸியேட்ஸ் உடனான எமது கூட்டாண்மை உறுதி செய்கிறது. தங்களது இல்லங்கள், தொழில் அமைவிடங்கள் மற்றும் அலுவலகங்களில் எமது நேர்த்தியான தயாரிப்பு பொருட்களை நேரில் பார்வையிட்டு, அவை குறித்த விரிவான தகவலைப் பெற்று, அவற்றை வாங்கி பயன்படுத்துவது மீது அறிவார்ந்த முடிவுகளை வாடிக்கையாளர்கள் எடுப்பதற்கு இந்த ஷோரூம் உதவும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.” என்று கூறினார்.

0Shares