நிசார் செயற்கைக்கோள் – உலகின் மிகத் துல்லியமான ஏவுதல்களில் ஒன்று.. இஸ்ரோ தலைவர் பெருமிதம்!

Loading

இந்தியாவின் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டை பயன்படுத்தி நிசார் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்காக, முழு நாடும் பெருமைப்படலாம் என இஸ்ரோ தலைவர் நாராயணன் பெருமிதம் தெரிவித்தார்.

இஸ்ரோவும், அமெரிக்கா நாசாவும் ₹11,284 கோடி செலவில் நிசார் (NISAR) செயற்கைக்கோளை கூட்டு முயற்சியாக வடிவமைத்தன. இது:பகல்/இரவு மற்றும் எந்தவொரு காலநிலையிலும் நிலவிய மாற்றங்களை துல்லியமாக படம் பிடிக்கிறதுபூமியின் மேற்பரப்பில் ஏற்படும் சிறிய நிலச்சரிவுகளையும் கண்டறியும் திறன் கொண்டது.

இந்த ஜிஎஸ்எல்வி எப்-16 ராக்கெட் மூலம்ஸ்ரீஹரிகோட்டா வில் இருந்து,மாலை 5.40 மணி, கடந்த 29-ம் தேதிசெயற்கைக்கோள் துல்லியமான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

இது குறித்து இஸ்ரோ தலைவர் நாராயணன் உரை:“இந்த ஏவுதல் உலகில் நடந்த மிகத் துல்லியமான ஏவுதல்களில் ஒன்று.நாசா விஞ்ஞானர்களே இந்திய தொழில்நுட்பத்தால் மயங்கியுள்ளனர்.ஐந்து நிலைகளைக் கொண்ட ராக்கெட் ஒவ்வொரு கட்டத்திலும் சிறப்பாக செயல்பட்டது.”இது இந்தியா-அமெரிக்கா இடையே தொழில்நுட்ப ஒத்துழைப்பு, மாதிரித் திட்டம் எனும் வகையில் பாராட்டப்படுகிறது.

0Shares