பாலியல் வழக்கு.. குற்றவாளிகள் 5பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

Loading

திருநெல்வேலி மாவட்டம், மானூர், குறிச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த 4 வாலிபர்கள் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இவர்கள் அனைவரும் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம், மானூர், குறிச்சிகுளம், தெற்கு தெருவை சேர்ந்த முகமதுகெளசர் , சதாம்உசேன், அசார்மைதீன், முகமதுசேக் அபுதாஹிர் ஆகியோர் பாலியல் குற்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளிகள் ஆவர். இவர்கள் மீது திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மாரியம்மாள் தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன் பேரில், அவரது வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரை செய்தார், மாவட்ட கலெக்டர் சுகுமாரிடம் .இதையடுத்து மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின் பேரில் நேற்று மேற்சொன்ன 4 குற்றவாளிகளும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதேபோல திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், செட்டிமேடு இந்திரா காலனியை சேர்ந்த சபரிமுத்து மகன் செல்வம் என்பவர் போக்சோ வழக்கு குற்றவாளி ஆவார். இவர் மீது அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் துறை நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன் பேரில், மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின் பேரில் நேற்றுகுற்றவாளி செல்வம் குண்டர் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று மொத்தம் 5 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தகக்குது.

0Shares