அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கம் சார்பில் செய்தியாளர் மற்றும் சிறந்த எழுத்தாளர்களுக்கு விருது!
![]()
சேலத்தில் நடைபெற்ற அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்க சிறப்பு கூட்டத்தில் மூத்த பத்திரிகையாளர்களுக்கு தேசியத் தலைவர் எஸ். ராஜேந்திரன்2025-ன் சிறந்த செய்தியாளர்மற்றும் சிறந்த எழுத்தாளர் விருது வழங்கி கௌரவித்தார்.
சேலம் முள்ளுவாடி கேட் மத்திய கூட்டுறவு வங்கி எதிரில் உள்ள சாந்தாஸ்ரமத்தில் அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்க சேலம் மாவட்ட சிறப்பு கூட்டம் தேசியத் தலைவர் டாக்டர் எஸ். ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சேலம் மாவட்ட தலைவர் ஆர். சுந்தரராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநிலத் துணைத் தலைவர் குழந்தைசாமி முன்னிலை வகித்தார். மூத்த பத்திரிகையாளர்கள் சேலம் அ. குழந்தைசாமி, மகுடஞ்சாவடி ஆர். சுந்தரராஜன், இளம்பிள்ளை பி. செல்வராஜ், சேலம் ஜெய்சந்த் லோடா, இடைப்பாடி ரவிவர்மா, ஆகியோருக்கு தேசியத் தலைவர் எஸ் . ராஜேந்திரன் விருது வழங்கி கௌரவித்தார்.மேலும் தர்மபுரி மாவட்ட சட்ட ஆலோசகர் முரளி, கோபால்மூத்த பத்திரிக்கையாளர் இவர்களுக்கும் கிரீடம் சந்தன மாலை அணிவித்துகௌரவித்தார்கள்
இக்கூட்டத்தில்மாநில துணைத்தலைவர் ஜோதி நரசிம்மன்,நீலகிரி மாவட்ட தலைவர் ரமேஷ்,ஈரோடு மாவட்ட தலைவர் நாசுருதீன்,ராணிப்பேட்டை மாவட்ட தலைவர்ரவிச்சந்திரன்,பொருளாளர் ஜெய்,கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் ஜெயபால், கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் வஜ்ரவேலு,செயலாளர் சையத் மொக்தர் அலி, பொருளாளர் பாலாஜிஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
மாவட்ட, தாலுக்கா அளவிலான நிருபர் மற்றும் போட்டோகிராபர் உள்ளிட்டோரை பத்திரிக்கையாளர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்த்தல், பத்திரிகையாளர்களுக்கு அரசு பஸ் பாஸ், அடையாள அட்டை வழங்குதல், காப்பீடு திட்டத்தில் பத்திரிக்கையாளர்களை உறுப்பினராக சேர்த்தல், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பத்திரிக்கையாளர்கள் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்குதல், பத்திரிக்கையாளர்களுக்கான ஓய்வூதியத்தை 15,000 மாக உயர்த்தி வழங்குதல், பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு சட்டம் உருவாக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் சேலம் மாவட்ட பொருளாளர் ஜெயிச்சந்த் லோடா, சேலம் ஆடிட்டர் ராஜபாலு (எ) கே. பாலசுப்பிரமணியன் , சங்ககிரி டி ராஜேந்திரன், பி.டி. ரத்தினம், மேட்டூர் பழனிசாமி, சி. மணிராஜ் , எஸ். பத்திரி ராஜ், எஸ். ஜெகன் பிரசாத், அ. ராதா உள்ளிட்ட மாநில, மாவட்ட, தாலுக்கா நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்ட முடிவில் மாவட்ட செயலாளர் பி. செல்வராஜ் நன்றி கூறினார்.

