சேவை பெறும் உரிமைச் சட்டம்” உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.. ஜனநாயக கட்சி தமிழக அரசுக்கு கோரிக்கை!

Loading

தமிழகத்தில் “சேவை பெறும் உரிமைச் சட்டம்” உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுதிருப்பதாக ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் ஷேக் நூர்தீன் அவர்கள்தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளாக தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:தமிழக அரசு பொதுமக்களுக்கு நேர்மையான, நேரடி மற்றும் நேரத்திற்குள் நிர்வாக சேவைகளை வழங்க வேண்டிய கட்டாய பொறுப்பு உடையது. தமிழக மக்களுக்கு அரசு வழங்கும் சேவைகள் — பிறப்புச் சான்றிதழ், குடும்ப அட்டை, வருமானச் சான்று, குடிநீர் இணைப்பு, நலத்திட்ட உதவிகள் போன்றவை — தாமதமின்றி, முறையான காலவரையறைக்குள் கிடைக்க வேண்டும் என்பது நியாயமான எதிர்பார்ப்புஇந்த நோக்கத்திற்காகவே பல மாநிலங்களில் “சேவை பெறும் உரிமைச் சட்டம்” (Right to Public Services Act) செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு நேரடி நன்மை ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மத்திய பிரதேசம், பிஹார், ஹரியானா, டெல்லி, கேரளா உள்ளிட்ட22 மாநிலங்களில் இந்தச் சட்டம் ஊழலை தடுக்கும் ஒரு கருவியாகவும், நியாயத்தை நிலைநாட்டும் பொறுப்புமிக்க சட்டமாகவும் திகழ்கிறது.ஆனால் தமிழகத்தில் இதுவரை இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. கடந்த காலங்களில் சட்டம் தொடர்பான வரைவு தயாரிக்கப்பட்டாலும், அது நிறைவேற்றப்படாமல் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. இது போலி வாக்குறுதிகளாகவே இல்லாமல், செயலில் அமைய வேண்டும் என்பதே மக்கள் எதிர்பார்ப்பு.எனவே, மக்களின் நலனுக்காக, தமிழகத்தில் “சேவை பெறும் உரிமைச் சட்டம்” உடனடியாக சட்டமாக இயற்றப்பட வேண்டும். அரசு சேவைகள் வழங்கும் அனைத்து துறைகளுக்கும் நேர நிர்ணயம் செய்யப்பட்டு, தாமதம் ஏற்படுமானால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொறுப்புக் கொடுக்கப்படும் கட்டமைப்பு அமைய வேண்டும்.

இது மக்கள் நலனுக்கான அடிப்படை உரிமையை உறுதி செய்யும் முக்கியமான தீர்வாகும். சட்டப்பேரவையில் இந்தச் சட்டம் விரைவில் இயற்றப்பட வேண்டும் என்பது தமிழகத்தின் விழிப்புணர்ந்த மக்களின் வலியுறுத்தலாகும் இந்த சட்டத்தினை தமிழகத்தில் பாமக கட்சியின் அன்புமணி மட்டுமே இந்த சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார். இன்னும் தமிழகத்தில் உள்ள சில அரசியல் தலைவர்களுக்கு இந்த சட்டத்தின் புரிதல் தெரியவில்லையா என்று கேள்வியும் எழுந்துள்ளது மக்களின் தேவைகளை அரசு உடனே நிறைவேற்ற வேண்டுமென்றால் இந்த சட்டம் தமிழக மக்களுக்கு உடனே தேவைப்படுகிறது தமிழக அரசு எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தி வந்தாலும் இந்த சட்டத்தின் மூலம் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களுக்கு மக்களின் கோரிக்கையாக தமிழக இஸ்லாமிய சுன்னத் ஜமாத் செயலாளர் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் ஷேக் நூர்தீன் அவர்கள்தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளாக தெரிவித்தார்.

0Shares