சிறுமி பாலியல் வன்கொடுமை: காட்டுபகுதியில் பதுங்கி இருந்த வாலிபரை சுட்டுப்பிடித்த போலீசார்!

Loading

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த குற்றவாளியை காட்டுபகுதியில் போலீசார் சுட்டுப்பிடித்தனர் .

உத்தரபிரதேச மாநிலம் பண்டா மாவட்டம் கலிஞ்ஜர் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 6 வயதில் பெண் குழந்தை உள்ளது . இந்நிலையில், சம்பவத்தன்று இந்த சிறுமியை பக்கத்து வீட்டில் வசிக்கும் 20 வயது இளைஞர் தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

தனக்கு நடந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி, பெற்றோரிடம் தெரிவித்ததை தொடர்ந்து வாலிபர் மீது போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த இளைஞரை தீவிரமாக தேடிவந்தனர் .

இந்தநிலையில் அந்த இளைஞர் கலிஞ்ஜரில் உள்ள காட்டுபகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்திய போது, அங்கு பதுங்கி இருந்த இளைஞர் தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு போலீசார் மீது சுட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், பதிலடி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர்.

இதில், போலீசார் சுட்டதில் இளைஞரின் 2 கால்களிலும் குண்டு பாய்ந்து காயமுற்றான். இதையடுத்து, இளைஞரை கைது செய்த போலீசார் , அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். கைது செய்யப்பட்ட இளைஞரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீசார் இதுவரை வெளியிடவில்லை.

0Shares