போதிய வசதி முதல் பராமரிப்பு வரை: 500+ தாய்ப்பால் ஊட்டும் அறைகளை நோக்கி ஹிமாலயா பேபிகேர்!

Loading

போதிய வசதி முதல் பராமரிப்பு வரை ஹிமாலயா பேபிகேர்தனது பயணத்தை தொடங்கி இன்று இந்தியா முழுவதும் 500+ தாய்ப்பால் ஊட்டும் அறைகளை நோக்கி ஹிமாலயா பேபிகேரின் பயணம் சென்றுள்ளது.

தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான தொடக்கங்களை வளர்ப்பதற்கான அதன் தொடர்ச்சியான உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, இந்தியா முழுவதும் 500க்கும் மேற்பட்ட தாய்ப்பால் ஊட்டும் அறைகளை வெற்றிகரமாக நிறுவியதாக ஹிமாலயா பேபிகேர் பெருமையுடன் அறிவிக்கிறது. தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு கவுரவமாகவும், வசதியாகவும் தாய்ப்பால் ஊட்ட தூய்மையான மற்றும் தனிப்பட்ட இடங்களை ஹிமாலயா பேபிகேர் வழங்குகிறது. தாய்வழி நல்வாழ்வு குறித்த பொது விழிப்புணர்வு அதிகரித்து வரும் இந்த நேரத்தில், தூய்மையான மற்றும் சிந்தனைமிக்க உள்கட்டமைப்புடன் தாய்மார்களை ஆதரிப்பதற்கான பிராண்டின் தொடர்ச்சியான முயற்சிகளை இந்த மைல்கல் பிரதிபலிக்கிறது.

மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் கோவா போன்ற முக்கிய போக்குவரத்து நகரங்கள் உட்பட 27 விமான நிலையங்களில் தாய்ப்பால் கொடுக்கும் அறைகள் அமைந்துள்ளன. தமிழ்நாட்டில், மதுரை மற்றும் கோயம்புத்தூர் விமான நிலையங்களில் இந்த வசதிகள் நிறுவப்பட்டுள்ளன. உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் மத்தியபிரதேசம் முழுவதும் 33 ரயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் அமைக்கப்பட்டு உள்ளன. கூடுதலாக, இந்தியாவில் உள்ள பெருநகரங்கள் மற்றும் பிராந்திய மையங்களில் 141 மருத்துவமனைகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் 268 அறைகள் உள்ளன.

 

0Shares