சேலத்தில் மாநில சீனியர் தடகள போட்டி..சிறந்த தடகள வீரர், வீராங்கனைகள் தேர்வு!

Loading

தமிழ்நாடு தடகள சங்கம் மற்றும் சேலம் மாவட்ட தட கள சங்கம் சார்பில் 97-வது மாநில சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், இரண்டு நாட்களாக போட்டி நடைபெற்றது.

இதில், மாநிலம் முழுவதும் இருந்து 1,200 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.மேலும், 5 ஆயிரம், 800, 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. அதேபோன்று உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்பட 20-க் கும் மேற்பட்ட போட்டிகள் நடைபெற்றன.

2 நாட்கள் நடைபெற்ற போட்டிகளில் 158 புள்ளிகள் பெற்று தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு அணி (எஸ்.டி.ஏ.டி.) ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்றது. 145 புள்ளிகள் பெற்று திருச்சி சி.வி.பி. ஸ்போர்ட்ஸ் அகாடமி அணி 2-ம் இடத்தை பெற்றது. 112 புள்ளிகளுடன் தமிழ்நாடு போலீஸ் அணி 3-ம் இடத்தையும், 102 புள்ளிக ளுடன் தென்னக ரெயில்வே அணி 4-ம் இடத்தையும் பெற்றன.

பின்னர், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன், தமிழ்நாடு தடகள சங்க சேர்மன் டபிள்யூ. ஐ.தேவாரம். தலைவர் டி.கே.ராஜேந்திரன், பொதுச்செயலாளர் சி.லதா ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பதக்கங்களை பரிசாக வழங்கினர்.

ஆண்கள் பிரிவில் ஐ.சி.எப். வீரர் தமிழரசு, பெண்கள் பிரிவில் திருச்சி சி.வி.பி. ஸ்போர்ட்ஸ்’ அகாடமி வீராங்கனை தனலட்சுமி ஆகியோர் சிறந்த தடகள வீரர், வீராங்கனைகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். விழாவில் சேலம் மாவட்ட தடகள சங்க தலைவர் விமலன், செயலாளர் முத்துக்குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0Shares