ஓசூரில் 14 ஆம் ஆண்டு புத்தகத்திருவிழா கோலாகல தொடக்கம்.!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் வாசகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்ப்பார்த்த 14 ஆம் ஆண்டு ஓசூர் புத்தகத்திருவிழா குளிர்சாதன வசதியுடன் கோலாகலமாக இன்று தொடங்கியது.
ஓசூரில் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை இளைஞர்கள்,பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் ஊக்கப்படுத்தும் விதமாக கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் புத்தக திருவிழாவிற்க்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
14 வது ஆண்டாக நடைபெறவுள்ள இந்த புத்தகத் திருவிழா, ஓசூர் தனியார் ஓட்டலில் குளிர்சாதன வசதியுடன் நடைப்பெற்று வருகிறது.இதனை மாவட்ட ஆட்சியர் திரு. தினேஷ்குமார் IAS அவர்கள் ரிப்பன் வெட்டி தொடக்கி வைத்தார்.
இன்று முதல் வரும் 22 ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு நடைபெறும் இந்த புத்தகத் திருவிழாவில், 100 க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
மாணாக்கர்களை மையமாகக் கொண்டும் நடத்தப்படும் இந்த புத்தகத் திருவிழாவில், இந்த ஆண்டு 1லட்சத்திற்கும் மேற்பட்ட வாசகர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 1 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனையும் நடைபெறும் என ஒருங்கிணைப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தினந்தோறும் காலை 11 மணிக்கு தொடங்கும் புத்தகத்திருவிழா இரவு 9 மணிவரை நடைப்பெறுகிறது.
இந்த புத்தகத்திருவிழாவில் மாலை 6 மணி முதல் 7 மணி வரை பள்ளிக்குழந்தைகளின் நடன கலைநிகழ்ச்சிகளும், பாரம்பரிய இசை நிகழ்ச்சிகளும், 7 மணி முதல் எழுத்தாளர்கள்,முற்போக்கு சிந்தனையாளர்களின் கருத்துரைகளும் வழங்க உள்ளனர்.தினந்தோறும் அரசு பள்ளி மாணவர்கள் அழைத்துவரப்பட்டு வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலும் அறிவியல் கல்வி குறித்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.புத்தகத்திருவிழாவில் ஆன்மிகம்,அரசியல்,அறிவியல்,சிந்தனை,மருத்துவம் மற்றும் குட்டீஸ்களை கவரும் வகையில் எண்ணற்ற புத்தகங்கள் வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.
ஜூலை 11 முதல் 22 வரை 12 நாட்கள் நடைபெறும் “புத்தகத்திருவிழா” புத்தக பிரியர்களுக்கு நிச்சயம் தவிர்க்க முடியாத திருவிழாவாகவே அமையும் என்பதில் சந்தேகமில்லை என்றே சொல்லலாம்.