முத்தக் காட்சி நீக்கியதால் கடும் கோபமடைந்த நடிகை!

Loading

‘சூப்பர்மேன்’ திரைப்படத்தின் இந்திய வெளியீட்டில் 33 விநாடிகள் உள்ள முத்தக் காட்சி நீக்கப்பட்டது. இந்த முடிவை நடிகை ஷ்ரேயா தன்வந்தரி கடுமையாக விமர்சித்துள்ளார்.

நடிகை ஷ்ரேயா தன்வந்தரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலளித்து கூறியதாவது:“தணிக்கை குழுவின் இந்த முடிவு முற்றிலும் அர்த்தமற்றது. ஒரு படம் பார்க்க நாம் பணமும் நேரமும் செலவிடுகிறோம். எதை பார்க்க வேண்டும், எதை பார்க்கக் கூடாது என்பதை நாங்களே முடிவு செய்ய முடியும் என்றார் .”

இந்த புதிய ‘சூப்பர்மேன்’ திரைப்படம் DC Studios சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஜேம்ஸ் கன் (முன்னர் ‘Guardians of the Galaxy’ புகழ்)இயக்கத்தில்,

கதாநாயகனாக டேவிட் கோரன்ஸ்வெட் – சூப்பர்மேன் நடிக்கிறார்.கதாநாயகியாக ரச்சேல் புரோஸ்நாகன் – லூயிஸ் லேன் நடிக்கின்றனர்,நிக்கோலஸ் ஹோல்ட் – லெக்ஸ் லூதர் வில்லனாக நடித்துள்ளார்,

இந்தியாவில் இந்த படம் ஜூலை 11 அன்று வெளியானது.இந்தப் படம் உலகளாவிய ரசிகர்களிடையே எதிர்பார்ப்புடன் வெளியான நிலையில், தணிக்கை குழுவின் காட்சியிழப்பு குறித்து சமூக வலைதளங்களில் விவாதமும் விமர்சனமும் எழுந்துள்ளது.

சினிமா என்பது கலை. அதைக் கடந்து செல்கிற தணிக்கை குழு தலையீடு ஏற்க முடியாதது” என நடிகையின் பதிவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

0Shares