நாளை மக்கள் தொடர்பு முகாம்.. தேனி மாவட்ட ஆட்சியர் அழைப்பு!

Loading

தேனி வட்டம், ஜங்கால்பட்டி கிராமத்தில் மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு முகாம் நாளை (09.07.2025) நடைபெற உள்ளது.

தேனி மாவட்டம், தேனி வட்டம், கொடுவிலார்பட்டி உள்வட்டம், ஜங்கால்பட்டி கிராமத்தில் நாளை (09.07.2025) காலை 10.00மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.

தேனி வட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை (பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகைகோருதல், புதிய குடும்ப அட்டை கோருதல், ஆதி திராவிடர் நலத்துறை,மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை,விபத்து நிவாரணம், விவசாயத்துறை, போக்குவரத்துத்துறை மற்றும் இதர துறைகள்) ஜங்கால்பட்டி கிராமத்தில் நடைபெறும் மக்கள்தொடர்பு திட்ட முகாமில் நேரில் மனுவினைக்கொடுத்து பயன்பெற்றுக் கொள்ளலாம் என்றுமாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள்தெரிவித்துள்ளார்கள்.

0Shares