காக்களூர் ஏரி மேம்படுத்தும் பணிகள்.. அமைச்சர் நாசர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.!

Loading

காக்களூர் ஏரி மற்றும் தாமரைக் குளத்தை நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.2.27 கோடி மதிப்பில் மேம்படுத்தும் பணிகளை அமைச்சர் சா.மு.நாசர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் மற்றும் ஊராட்சி ஒன்றியம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக காக்களூர் ஊராட்சியில் காக்களூர் ஏரி மற்றும் தாமரைக்குளத்தினை நமக்கு நாமே திட்டத்தின் (NNT 2025-26) கீழ் மேம்படுத்துதல் பணிகளை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமை தாங்கினார். பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தார்.

காக்களூர் ஏரியானது காக்களூர் ஊராட்சி 21 குக்கிராமங்களும், 12.15 சதுர கி.மீ. பரப்பும் 30000–க்கும் அதிகமான மக்கள் தொகையும் அதிக அளவிலான தொழிற்சாலைகளும் நிரம்பியுள்ள ஊராட்சியாகும் காக்களூர் ஏரியை சுற்றி சுமார் 2 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.

தாமரைக்குளம், காக்களூர் ஊராட்சியில் ஊராட்சி மன்றத்திற்கு அருகாமையில் சுமார் 4.85 ஹெக்டேர் பரப்பளவில் தாமரைக்குளம் அமைந்துள்ளது. இக்குளத்திற்கு அருகாமையில் கலைஞர் நூலகம், அரசு அலுவலகங்கள், விளையாட்டு கூடம், பூங்கா, அரசு தொடக்க மற்றும் மேல்நிலை பள்ளிகள் ஆகியவை அமைந்துள்ளதால், பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த குளத்தை சீரமைத்து தருவதனால் பயனுள்ளதாக அமையும் என கோரிக்கைகள் விடுத்தனர். மேலும், இந்த தாமரைக்குளத்திற்கு அருகில் அமைந்துள்ள பூங்காவினை ஊர் பகுதியில் வசிக்கக்கூடிய மாணவர்களும், இளைஞர்களும் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த ஏரியினை மேம்படுத்தி நடைபாதை, மின்விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை அளித்தனர். பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காக்களூர் ஏரி மற்றும் தாமரைக்குளம் மேம்படுத்துதல் பணி நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 2 கோடியே 27 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் நிதி ஒதுக்கீடு அளிக்கப்பட்டு அனுமதி வழங்கினார்.மேலும் பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களின் பங்களிப்பு தொகை ரூ.75.67 இலட்சத்தினை உள்ளடக்கி இதற்கான நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டது.

அதன்படி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக காக்களூர் ஊராட்சியில் காக்களூர் ஏரி மற்றும் தாமரைக்குளத்தினை நமக்கு நாமே திட்டத்தின் (NNT 2025-26) கீழ் மேம்படுத்துதல் பணிகளை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் திட்ட இயக்குநர்/இணை இயக்குநர் வை.ஜெயக்குமார், செயற்பொறியாளர் (ஊ.வ) வி.ராஜவேல், துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

0Shares