எல்லைதாண்டி மீன் பிடித்தால் கைது,நடவடிக்கை தொடரும்.. இலங்கை அமைச்சர் உறுதி!

Loading

தமிழக மீனவர்கள் எல்லைதாண்டி மீன் பிடித்தால் கைது மற்றும் படகு பறிமுதல் நடவடிக்கை தொடரும் என இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் கூறியுள்ளார்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகிறது. என்னை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை ஒவ்வொரு முறையும் இலங்கை கடற்படை கைது செய்வதோடு மட்டுமல்லாமல் அவர்களது படைகளையும் எடுத்து சென்று விடுகின்றனர். இந்த சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மீனவர்கள் தங்களுடைய எதிர்ப்புகளை தெரிவிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர் மீனவர்கள்.

இதனால் மீனவர்கள் அச்சத்துடன் கடலுக்கு சென்று வருகின்றனர், சமீப காலமாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்து செல்வது அதிகரித்துக் கொண்டே செல்கிறது இந்த நிலையில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரன் மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 11 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது,

இந்த பிரச்சனை தொடர்பாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் கூறுகையில்,
இலங்கைக் கடல் எல்லையில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கும் சம்பவங்கள் கடந்த இரண்டு மாதங்களாக குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.இந்திய மீனவர்கள் தடை செய்யப்பட்ட மீன்பிடிக்கும் முறைகளை பின்பற்றுகின்றனர். இதனால் கடல்வளம் பெரிதும் பாதிக்கப்படுவதோடு, இலங்கையின் வடக்கு பகுதியில் வாழும் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.

எல்லைதாண்டி மீன் பிடித்தால் கைது மற்றும் படகு பறிமுதல் நடவடிக்கை தொடரும். மீனவர்கள் மற்றும் படகுகள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த பிரச்சனையை தூதரக ரீதியாக இந்தியாவிடம் கொண்டு செல்வதோடு, சட்டவிரோதமாக மீன்பிடிக்கும் மீனவர்களை கைது செய்ய இலங்கை அரசு, இலங்கை கடற்படைக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கியுள்ளது என்று தெரிவித்தார்.

0Shares