இடிந்து விழும் நிலையில் நூலக கட்டிடம்,பயணிகள் நிழற்குடை.. கண்டுகொள்ளுவாரா குமரி மாவட்ட ஆட்சியர்?
மேற்கு கொடுப்பைகுழி கிராமத்தில் பழுதடைந்த நிலையில் இடிந்து விழும் தருவாயில் உள்ள நூலகம் மற்றும் பயணிகள் நிழற்குடையை மாற்றி புதிதாக கட்டிதர மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் காமராஜர் நற்பணி மன்றத்தார் மற்றும் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் தொகுதிக்கு உட்பட்ட குருந்தன்கோடு அருகே உள்ளது மேற்கு கொடுப்பை குழி, இந்த கிராமத்தில் சுமார் 25 வருடங்களுக்கு முன்னால் பஞ்சாயத்து நூலகம் கட்டப்பட்டது. ஆனால் இப்போது அந்த நூலகம் மிகவும் பழுதடைந்த நிலையில் இடிந்து விழும் தருவாயில் உள்ளது.
இதனை சீரமைத்து தர குருந்தன்கோடு ஒன்றிய அலுவலகத்திலும் ,ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் பல முறை புகார் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,
தற்போது அந்த நூலக கட்டிடம் கனமழை பெய்தால் இடிந்து விடும் விழும் நிலையில் உள்ளது, ஆகவே ஊர் மக்கள் மற்றும் மாணவ மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு புதிதாக ஒரு நூலகம் அதே இடத்தில் அமைத்து தர வேண்டி மேற்கு கொடுப்பை குழி காமராஜர் நற்பணி மன்றம் மற்றும் ஊர் மக்கள் சார்பாக மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,
இந்த கோரிக்கை மனுவை காமராஜர் நற்பணி மன்ற தலைவர் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனுவாக அளித்துள்ளனர், விரைந்து மாவட்ட ஆட்சியர் இந்த நூலகத்தின் நிலைமை கருத்தில் கொண்டு புதிய நூலகம் அமைத்து தருவார்கள் என்று நம்பிக்கையில் மேற்கு கொடுப்பை குடிமக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அதேபோல் நூலகம் அருகில் உள்ள பயணிகள் நிழற்குடை மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது ,இதையும் சீரமைத்து தர ஊராட்சி மன்றம் மற்றும் ஒன்றிய அலுவலகத்திற்கு பலமுறை புகார் அளித்தும் அவர்கள் செவி சாய்க்காத காரணத்தால் மாவட்ட ஆட்சியர் செவி சாய்த்து இந்த பயணிகள் நிழற்குடையை சீரமைத்து தரவேண்டும் என்று இரண்டு கோரிக்கைகள் மாவட்ட ஆட்சியருக்கு முன் வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் காமராஜர் நற்பணி மன்றத்தார் மற்றும் பொதுமக்கள் மனுவாக அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.