சர்க்கரை நோய்க்கு ‘டையா பூஸ்டர்’ எனும் புதிய மருந்து : சென்னையில் அறிமுகம்!
மருந்து என்றாலும் இது ஒருவகை உணவு என மருத்துவர்கள் குழு விளக்கம் அளித்துள்ளனர்.அதுமட்டுமல்லாமல் பிற நோய்களுக்கு மருந்து சாப்பிடுபவர்களுக்கும் சாப்பிடக்கூடிய டையா பூஸ்டர் எனவும் தெரிவித்துள்ளனர்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் ஓட்டலில் மருத்துவர்கள் தின கொண்டாட்டம் நடைபெற்றது. ஆரோக்கியா ஹெல்த் மற்றும் ஆராய்ச்சி மருத்துவமனை மற்றும் ஜிங்கா மார்க்கெட்டிங் நிறுவனம் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில் ஏராளமான மருத்துவர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் போது, டையா பூஸ்டர் எனும் டையாபிடிக்ஸ் மருந்து அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மருந்து சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கக்கூடிய ஒரு உணவு என்று தெரிவிக்கப்பட்டது.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர்கள் குழுவினர், “சர்க்கரை என்பது மெதுவாக பாதிக்கக்கூடிய விஷயம்போல. ஒவ்வொரு உடல்பாகங்களையும் பாதிக்கும். ஆனால் அதற்கு இவர்கள் கண்டுபிடித்துள்ள மருந்து என்பது ஒரு உணவு. சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியுமே தவிர, குணப்படுத்த முடியாது. ஆனால் இவர்கள் கண்டுபிடித்துள்ள மருந்து சர்க்கரை நோய்க்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது. நீங்கள் வேறு ஏதேனும் நோய்க்கு மருந்து எடுத்துக்கொண்டால், அதனுடன் சேர்த்து இதனை சாப்பிடலாம். விரைவில் அனைத்து மருந்தககங்களிலும் இந்த மருந்து கிடைக்கும்” என்று தெரிவித்தனர்.