இன்று சர்வதேச யோகா தினம் மற்றும் உலக இசை தினம்!
சர்வதேச யோகா தினம்!.
சர்வதேச யோகா தினம் (International Yoga Day) ஆண்டுதோறும் ஜூன் 21 ஆம் தேதி கொண்டாடப்படும் என ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளது.
யோகா என்னும் பழமையான கலைப்பயிற்சி மனிதர்களின் வாழ்வில் மனஅமைதியை ஏற்படுத்தி உடலை என்றும் ஆரோக்கியமாக பாதுகாக்கின்றது.
யோகா தினத்திற்கான முன்முயற்சியை இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி தனது 2014 ஐ.நா. உரையில் எடுத்தார் , மேலும் இது தொடர்பான தீர்மானம் பரந்த உலகளாவிய ஆதரவைப் பெற்றது, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் 177 நாடுகள் இதற்கு ஒத்துழைப்பு அளித்தன , அங்கு அது ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, முதல் சர்வதேச யோகா தினம் 21 ஜூன் 2015 அன்று நியூயார்க், பாரிஸ், பெய்ஜிங், பாங்காக், கோலாலம்பூர், சியோல் மற்றும் புது டெல்லி உட்பட உலகம் முழுவதும் வெற்றிகரமாக கொண்டாடப்பட்டது.
உலக இசை தினம்!.
உலக இசை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது.
இசை என்பது வாழ்வில் இரண்டற கலந்துவிட்ட ஒன்று. நமது எண்ணம், செயல்கள் மற்றும் நினைவுகள் ஆகியவை அடங்கிய உணர்வு பூர்வமானது இசை. பெரும்பாலானோரின் கவலையை தீர்க்கும் மருந்தாகவும், சிறந்த பொழுதுப்போக்கு அம்சமாகவும் இசை திகழ்கிறது.
வரும் தலைமுறையினருக்கு இசையில் ஆர்வத்தை அளிக்கவும், இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை பாராட்டும் விதத்திலும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.