இன்றைய ராசிபலன் – 12.06.2025

Loading

இன்றைய ராசிபலன் – 12.06.2025

இன்றைய ராசிபலன்:-

மேஷம்

குடும்பத் தலைவிகளுக்கு சேமிப்பில் கவனம் தேவை. இரும்புத் தொழிலில் லாபம் அதிகரிக்கும். தாமதித்த பணம் கைக்கு வரும். வழக்கில் திருப்பம் நிகழும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவர். உத்யோகஸ்தர்களுக்கு வேலை பளு கூடும். தேகம் பளிச்சிடும்.

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

ரிஷபம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

மிதுனம்

தங்கள் பிள்ளைகள் தங்கள் சொல்படி நடப்பர். வெளியூர் செய்தி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் ஆர்வம் கூடும். மாணவர்கள் திறன் கூடும். உடல் வலி நீங்கும். அண்டை வீட்டார்கள் உதவுவர். பணத்தட்டுப்பாடு நீங்கும். நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

கடகம்

பிரிந்தவர் ஒன்று சேருவர். வெளியூர் பயணம் மேற்கொள்வர். மார்கெட்டிங் பிரிவினர் அதிக ஆர்டர்களை பெறுவர். எதிர்பாராத நன்மைகள் கிட்டும். பத்திரிகையாளர்கள் பயன் பெறுவர். எடுத்த காரியம் வெற்றியடையும். ஆன்மீகத்தில் மனம் நாடும். தேகம் ஆரோக்கியம் மேலோங்கும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

சிம்மம்

தன்னம்பிக்கை மிளிரும். அக்கம் பக்கத்தினரிடம் வாக்குவாதம் வேண்டாம். பொறுமை அவசியம். மூத்த அதிகாரிகள் பாராட்டுவர். பெரியவர்களிடம் பணிவு தேவை. கணவரிடம் அனுசரிப்பது நல்லது. அத்யாவசிய பொருட்களை வாங்குவீர்கள். வங்கிக் கடன் கிடைக்கும். தேகம் மிளிரும்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

கன்னி

பணம் பாக்கெட்டை நிரப்பும். செல்வாக்கு பெருகும். வியாபாரம் செழிக்கும். வீட்டை புதுப்பிப்பீர்கள். வெளிநாட்டு பயணம் சிறப்பாகும். எதிர்பார்த்த காரியம் வெற்றி பெறும். தம்பதிகள் அன்பு கூடும். பிள்ளைகள் நன்கு படிப்பர். வெளியிடங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவர்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

துலாம்

உத்யோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை குறையும். தம்பதிகள் அன்பின் திளைப்பர். விட்டுக் கொடுத்து வாழ்வர். புரிதல் கூடும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாவர். பங்குச் சந்தையில் ஆதாயம் உண்டு. பண வரவு நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்

விருச்சிகம்

நினைத்த விசயம் கைகூடும். வருவாய் அதிகரிக்கும். கணவன் மனைவி உறவில் அன்பு கூடும். நிலுவையில் இருந்த பல காரியங்கள் நிறைவேறும். எதிரிகள் சரணடைவர். மாணவர்கள் நினைவாற்றம் கூடும். பிள்ளைகளால் ஆறுதலடைவீர்கள். உத்யோகத்தில் மதிப்பு கூடும்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

தனுசு

தம்பதிகளின் அன்யோன்யம் கூடும். பூர்வீக சொத்தில் உங்களுக்குரிய பங்கு வந்து சேரும். உத்யோகத்தில் நிறை குறைகள் இருக்கும். இளைஞர்கள் புதிய நிறுவனத்தில் வேலையில் அமர்வார்கள். பெண்கள் ஆடை மற்றும் ஆபரணங்களை வாங்கி குவிப்பர்.

அதிர்ஷ்ட நிறம் : கிரே

மகரம்

பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். தம்பதிகள் விட்டுக் கொடுத்து வாழ்வர். பணப்பொறுப்புக்களை கையாள்பவர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். வீட்டினை விற்ற பணத்தை கொண்டு புதிய சொத்தினை வாங்குவீர்கள். மகன் சம்பந்தமாக இனிக்கும் செய்தி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

கும்பம்

உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். உடன் பிறந்தவர்கள் உதவுவர். தேக்க நிலையில் இருந்த வழக்குகள் முடிவுக்கு வரும். வீடு வாங்கும் திட்டம் நிறைவேறும். வியாபாரம் சீராகவும், சாதகமாகவும் இருக்கும். மொத்தத்தில் வாழ்க்கையின் திருப்புமுனையாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

மீனம்

உத்யோகத்தில் சக ஊழியர்களால் நன்மை உண்டாகும். மருத்துவ செலவுகளுக்கும் இடம் உண்டு. உணவு விசயத்தில் கவனம் தேவை. வாகனத்திற்கு அதிக செலவு ஏற்படக்கூடும். வீடு, நிலபுலன்களை விற்பதற்காக எடுத்த முயற்சிகள் வெற்றி அடையும். நண்பர்களை சந்திக்கும் நாளிது.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

0Shares