பாண்டி-கடலூர் சாலையில் போக்குவரத்து மாற்றம்.!
![]()
ஸ்ரீ நாக முத்துமாரியம்மன் கோவிலின் கும்பாபிஷேக திருவிழாவை முன்னிட்டு இன்று ஒருநாள் பாண்டி-கடலூர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:இன்று வெள்ளிக்கிழமையன்று காலை புதுவை, நைனார்மண்டபம். பாண்டி-கடலூர் சாலையில் அமைத்துள்ள ஸ்ரீ நாக முத்துமாரியம்மன் கோவிலின் கும்பாபிஷேக திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிமாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் நலன் கருதி பொதுமக்களின் வசதிக்காக இன்று காலை சுமார் 06.00 மணிமுதல் முருங்கப்பாக்கம் to மரப்பாலம், பாண்டி கடலூர் சாலை போக்குவரத்தில் கீழ்கண்ட சில மாற்றங்கள் செய்யப்படுகிறது:-
கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி வரும் பேருந்துகள் உள்ளிட்ட கனரக மற்றும் நடுத்தர வாகனங்கள் அனைத்தும் தவளக்குப்பம் சந்திப்பில் இருந்து மேற்கு பக்கம் திரும்பி அபிஷேகப்பாக்கம் கரிக்கலாம்பக்கம் வழியாக வில்லியனூர் அடைந்து விழுப்புரம் சாலை வழியாக இந்திராகாந்தி சதுக்கம். MM அடிகள் சாலையில் புதுச்சேரியை அடைய வேண்டும்.
அதேபோல் புதுச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து கடலூர் செல்லும் வாகனங்கள் வெங்கட சுப்ப ரெட்டியார் சதுக்கம் அடைந்து ‘U’ Turn திரும்பி, இந்திரா காந்தி சதுக்கம் வில்லியனூர் கரிக்கலாம்பாக்கம் -அபிஷேகப்பாக்கம் வழியாக தவளக்குப்பம் அடைந்து கடலூர் சாலையை அடைய வேண்டும்.
புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி செல்லும் மற்றும் கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி வரும் இருசக்கர வாகனங்கள், இலகுரக வாகனங்கள்(LMV) போக்குவரத்து நெரிசலை பொறுத்து முருங்கப்பாக்கம் சந்திப்பில் இருந்து மரப்பாலம் சந்திப்பு வரை சாலையின் ஒருபக்கத்தில் மட்டும் செல்ல அனுமதிக்கப்படும்.
போக்குவரத்து நெரிசலை பொறுத்து, கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி வரும் இருசக்கர வாகனங்கள் முருங்கப்பாக்கம் சந்திப்பில் இருந்து இடது பக்கம் திரும்பி கொம்பாக்கம் அரவிந்தர் நகர் வழியாக வேலராம்பேட் ஏரிக்கரை ரோட்டை அடைந்து பின்பு மரப்பாலம் சந்திப்பு வழியாக புதுச்சேரியை அடைய வேண்டும்.
அதேபோல் புதுச்சேரியில் இருந்து கடலூர் செல்லும் இருசக்கர வாகனங்கள் மரப்பாலம் சந்திப்பில் வலது பக்கம் திரும்பி வேல்ராம்பேட் ஏரிக்கரை ரோட்டை அடைந்து அரவிந்தர் நகர் வழியாக கொம்பாக்கம் அடைந்து கிழக்கு பக்கம் திரும்பி முருங்கபாக்கம் சந்திப்பில் கடலூர் சாலையை அடைய வேண்டும்.
கும்பாபிஷேகத்திற்கு வருகை தரும் பக்கதர்கள் அனைவரும் தங்களது வாகனங்களை, 100 அடி சாலைக்கு மேற்கு பக்கத்தில் சாலை ஓரத்தில் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் நிறுத்தவேண்டும்.
எனவே கோவிலுக்கு வரும் பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த தற்காலிக போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைக்குமாறு போக்குவரத்து காவல் பிரிவு சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

