அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தற்போது நடைபெற்றுவரும் பணிகள் குறித்த ஆலோசனை!

Loading

அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தற்போது நடைபெற்றுவரும் பணிகள் குறித்த ஆலோசனை!

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் நேற்று தலைமைச் செயலகத்தில் 2025-26 ஆம் நிதி ஆண்டின் நிதிநிலை அறிவிப்பு பணிகள் குறித்து நிர்வாக ஒப்புதல் பெற மதிப்பீடுகளை விரைவாக தயாரித்து அரசின் அனுமதி பெறவும், பணிகளை விரைவில் துவங்கவும், டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளின் தற்போதைய நிலை குறித்த விவரங்களையும் ஆய்வு செய்து விரைவில் பணிகளை நிறைவு செய்ய மண்டல தலைமைப் பொறியாளர்களை அறிவுறுத்தினார்.

இந்தஆய்வு கூட்டத்தில் நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, நீர்வளத் துறை சிறப்புச் செயலாளர் சு. ஸ்ரீதரன், முதன்மை தலைமைப் பொறியாளர் சா. மன்மதன், மண்டல மற்றும் செயலாக்கப்பிரிவு தலைமைப் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

0Shares