ஆண்டிபட்டியில் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்த வேப்ப எண்ணெய் பயிற்சி!

Loading

தேனி மாவட்டம் தேனி ஆண்டிபட்டி சுந்தர்ராஜபுரம் கிராமத்தில் பூச்சி மற்றும் நோய்களை விரட்டும் வேப்ப எண்ணெய் பற்றிய செய்முறை விளக்க பயிற்சி சுந்தரராஜபுரம் கிராமத்தில் இயற்க்கை முறையில் பூச்சி மற்றும் நோய்களை விரட்ட பயன்படும் வேப்ப எண்ணெய் பற்றிய செய்முறை விளக்க நிகழ்ச்சியானது உதவி தோட்டக்கலை அலுவலர் திரு. பால்பாண்டி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் உள்ள RVS பத்மாவதி தோட்டக்கலை கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகள் ர.கௌசிகா, பெ.லாவண்யா, ஆ.லியாஜேன், செ. மாலதி, மா. மாளவிகா மற்றும் கா.மாரிஸ்வரி ஆகியோர் கிராமபுற தோட்டக்கலை பணி அனுபவத்திட்டத்தின் வாயிலாக இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு வேப்ப எண்ணெய் பயன்படுத்தும் முறை பற்றியும் அதன் பயன்கள் குறித்தும் விவசாயிகளுக்கு செய்து காண்பித்தனர்.

அதாவது 1 மிலி வேப்ப எண்ணையை 100 மிலி தண்ணீரில் கலந்து அதனுடன் சிறிதளவு சோப்புக் கரைசலையும் சேர்த்து நன்றாக கரைத்து தெளிப்பான் கொண்டு தெளிப்பதன் மூலம் பூச்சி விரட்டி, பூஞ்சைக் கொல்லி மற்றும் செடிகளின் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்தவும் உதவுகிறது என்பதை மாணவிகள் எடுத்துரைத்ததின் வாயிலாக விவசாயிகள் பலர் பயனடைந்தனர். இதனை RVS பத்மாவதி தோட்டக்கலை கல்லூரியின் இணை பேராசியர் முனைவர் வா. புனிதவதி அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு தேவையான அறிவுரைகளை வழங்கி வழிநடத்தினார்.

0Shares